வேதாகமத்திலுள்ள மிகப்பெரிய வெகுமதி THE GREATEST GIFT IN THE BIBLE 57-0811A ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ஆகஸ்ட் 11, 1957 எட்மண்டன் அரங்கம், எட்மண்டன் அல்பெர்டா கனடா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ùNn§: 57-0811A - வேதாகமத்திலுள்ள மிகப்பெரிய வெகுமதி நன்றி. நீங்கள் அமரலாம்... இம்மதிய வேளையில் கூடியுள்ள இந்த அற்புதமான மக்கள் கூட்டத்தைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இது, நாம் எந்த இரவுக் கூட்டத்திலும் கொண்டிருந்த அதே அளவிலான கூட்டம் என்று நான் நினைக்கிறேன். பொதுவாக ஞாயிறு மதியக் கூட்டங்கள் மிகக் குறைவாகவே இருக்கும், ஏனென்றால், மக்கள் ஞாயிறு மதியங்களில் வெளியே சென்று தங்களுக்கென்று சற்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள்; ஆனாலும் கர்த்தரை நேசிக்கிற மக்களின் ஆர்வம் இங்கே இருப்பதை இது காட்டுகிறது. ஆகையால் இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இப்போதுதான் இங்கே சகோதரர் கார்வரிடம் பேசிக் கொண்டிருந்தேன்... நான் மேலே வரும்போது கேட்டு மகிழ்ந்த அந்தச் சிறந்த இசை மற்றும் பாடலைப் பற்றியும், எனது நண்பர் சகோதரர் ராஸ்முசெனிடம் திரைக்கப்பால் பேசியது குறித்தும் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். 2 இப்போது, கூட்டங்கள் செவ்வாய்க் கிழமை இரவு முதல் தொடர்ந்து நடை பெறும். சகோதரர் கார்வர் மற்றும் அவரது சுவிசேஷக் குழுவினர் தொடர்ந்து நடத்து வார்கள். இந்தச் சிறந்த இசை மற்றும் பாடல், அதோடு பிரசங்கம், நோயாளி களுக்காக ஜெபித்தல் மற்றும் பல காரியங்கள் தொடர்ந்து நடைபெறும். அது எங்கே இருக்கும் என்று அவர்கள் ஏற்கனவே அறிவித்திருப்பார்கள் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன், சகோதரர் கார்வர் அவர்களே. ஆகவே, நீங்கள் தொடர்ந்து இந்தச் சிறந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம். சற்று நேரத்திற்கு முன்பு, அலாஸ்காவின் ஏங்கரேஜிலிருந்து எனது சிறிய நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது, அவர் கிட்டத்தட்ட தனது கடிதத்தை முந்திவிடும் நிலையில் இங்கு வந்து சேர்ந்தார். சுவிட்சர்லாந்திலிருந்து வந்துள்ள என்னுடைய மிகச் சிறந்த நண்பரான சகோதரர் ஃபான்ட்லரைவிட பதினைந்து நிமிடங்கள் அவரது கடிதம் முந்தியிருந்தது. 3 அவரது மனமாற்றத்தையும், கர்த்தர் அவரை எப்படி அழைத்தார் என்பதையும், அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதையும் நாம் நிச்சயமாக நினைவுகூர முடியும். ஒரு காலத்தில் அவர் மிகவும் கடினமான மனிதராக இருந்தார். இது ஒருவித மோசடி அல்லது ஏமாற்று வேலை என்று அவர் நினைத்தார். தனக்குத் தெரிந்த ஒருவரை அவர் அழைத்துச் சென்று ஜெப வரிசையில் நிறுத்தினார்கள். பரிசுத்த ஆவியானவர் அந்த மனிதர் யார் என்று சொன்னது மட்டுமல்லாமல், அவரை அழைத்து வந்த அந்த சிறிய மனிதர் யார் என்பதையும் வெளிப்படுத்தினார். அது அவரைச் சரியாகச் சரிப்படுத்தியது. அன்றிலிருந்து நாங்கள் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம். எர்னி, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் எழுந்து நிற்பீர்களா, அல்லது கை உயர்த்துவீர்களா? அவர் இங்கே எங்கேயோ இருக்கிறார், எர்னி ஃபான்ட்லர். அவர் கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர். ஆம், அதோ மேலே... ஓ, என் தேவனே. அவ்வளவு உயரத்தில் உங்களை யாரால் பார்க்க முடியும்? சகோதரர் எர்னி மற்றும் அவரது அன்பு மனைவி, மற்றும் இரண்டு அருமையான சிறு பையன்கள்; அவர்கள் விஸ்கான்சினில் உள்ள ஷாவானோவில் இருந்தபோது நான் அவர்கள் வீட்டில் இருந்திருக்கிறேன். அவர்கள் அலாஸ்காவின் ஏங்கரேஜிலிருந்து கிளம்பி மீண்டும் அங்கே செல்லும் வழியில் இருக்கிறார்கள். அவர் இங்கே வர முயற்சிப்பதாகக் கூறினார், ஆனால் அந்த இரண்டாயிரம் மைல்கள் பாறைகள், சாலைகள் மற்றும் சேற்றின் வழியாக அவர் எப்படி வண்டி ஓட்டி வந்தார் என்பது ஆச்சரியம். கூட்டத்தை அனுபவிப்பதற்காக இங்கே வர அவர் முயற்சி செய்ததில், நீங்கள் அவரது காரைப் பார்த்திருக்க வேண்டும். அது விசுவாசமுள்ள செயல், இல்லையா? அது உண்மையில் விசுவாசமானது. 4 இப்போது, இன்றிரவு மீண்டும் சுகமளிக்கும் கூட்டம் நடைபெறும். இன்றிரவு கிறிஸ்து நமக்காக மிகவும் அதிகமான காரியங்களைச் செய்வார் என்று எதிர்பார்க் கிறோம். இந்த மதிய வேளை ஒரு சுவிசேஷக் கூட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது, எனவே நான் உடனடியாகப் பேசிவிட்டு, பின்னர் நீங்கள் வீட்டுக்குச் சென்று, மதிய உணவருந்தி, மீண்டும் திரும்பி வர நேரம் இருக்கும். இன்று காலை மிகவும் பரபரப்பாக இருந்தது, இன்று காலை நான் சந்தித்த தனிநபர்களோடு கர்த்தர் அற்புதமாக இடைபட்டார். நாங்கள் தரிசனங்களைக் கண்டோம், வாழ்க்கையைச் சீர்படுத்தினோம், இன்னும் பல. அவர் அற்புதமானவர். நாம் அனைவரும் அவரை நேசிக்கிறோம், நான் நிச்சயமாயிருக்கிறேன். கால்கரியிலிருந்து யாரேனும் இங்கே இருந்தால்... அந்த அழைப்புகள் மற்றும் பிற அனைத்தையும் நாங்கள் பெற்றோம், அவை அனைத்தும் பாராட்டப்படுகின்றன, ஆனால் நான்... ஒருவேளை குளிர்காலம் தொடங்கு வதற்கு முன்பு, புதன் முதல் ஞாயிறு வரை ஒரு சிறிய கூட்டத்திற்காக கால்கரிக்குத் திரும்பி வரலாம். அவர்கள் ஸ்டாம்பீட் மைதானத்தைப் பெறலாம் என்று கூறி னார்கள், ஆனால் அதிக குளிர் வந்த பிறகு முடியாது. குளிர்காலத்தில் அங்கே வெப்ப வசதி செய்யப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே ஒருவேளை நாங்கள் திரும்பி வரலாம். இந்த இலையுதிர் காலத்தில் நான் இடாஹோவுக்கு வர வேண்டும். அங்கிருந்து ஒருவேளை நான் கால்கரியில் உள்ள மக்களுடன் அந்த வார இறுதியில் சில ஐக்கியங்களை வைத்துக்கொள்ள வரலாம். 5 இங்குள்ள ஊழியர்கள் தங்களுக்குக் கிடைத்த அழைப்பைத் தவிர வேறொன்றும் இல்லாமல், கொடுத்த சிறந்த ஒத்துழைப்பு அனைத்தும் நிச்சயமாகப் பாராட்டப்படுகிறது. சகோதரர் ஃப்ரெடி சோத்மன், நான் மிகவும் அன்பான சகோதரராக நேசிக்கக் கற்றுக் கொண்டவர், அவர் இங்கே வந்தார்... சகோதரர் ஃப்ரெட் ஒரு ஊழியர் அல்ல, ஆனால் அவர் கர்த்தரைத் தன் முழு இருதயத்தோடும் நேசிக்கிறார். நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஃப்ரெட் சோத்மனை விடச் சிறந்த மனிதரை நீங்கள் காண முடியாது. அவர்... அவர் இப்போது இங்கே இல்லை, அதனால்தான் நான் அப்படிச் சொல்ல முடிகிறது. புரிகிறதா? அவர் ஒரு சிறந்த மனிதர். என்னை மன்னிக்கவும். நான்... நான்... பில்லி உங்களை அறையின் பின்பகுதிக்கு அழைத்துச் செல்லவில்லையா? ஃப்ரெட், பில்லி உங்களைத் திரைக்குப் பின்னால் பார்க்க விரும்புகிறார்... நான் அவரிடம் அதைச் சொல்லியிருக்க வேண்டும், அவர் மேடையிலிருந்து போய்விட்டார் என்று நினைத்தேன். மன்னிக்கவும். உங்கள் பாவங்கள் உங்களைக் கண்டுபிடிக்கும், இல்லையா? அவர் அங்கே பின்னால் இருப்பதாக நான் உண்மையாகவே நினைத்தேன். நாடாக்கள் சம்பந்தமாக, லியோ, ஏதோ ஒன்று, யாரோ ஒருவர் முழு கூட்டத்தையும் ஒரு நாடாவில் அல்லது ஏதோ ஒன்றில் கேட்டது சம்பந்தமாக, பில்லி அவரை மேடைக்குப் பின்னால் பார்க்க விரும்பினார். 6 இப்போது, அவர் சென்றிருக்கும் வேளையில் நான் பேசலாம். அவர் நிச்சயமாக எனக்கு ஒரு உண்மையான சகோதரராக இருக்கிறார். அவர் கீழே வந்து, தன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்து, ஊழியர்களைச் சந்தித்து நாங்கள் வருகிறோம் என்று சொன்னார். நாங்கள் இதைச் செய்ய முயற்சிப்பதற்குக் காரணம், உங்களுக்கு ஒரு அனுசரணை இருந்தால், அதை அனுசரணை செய்யும் குறிப்பிட்ட சபைப்பிரிவைத் தவிர, மற்ற சபைப்பிரிவுகள் அதில் தங்களுக்குப் சம்பந்தமில்லை என்று உணர்கிறார்கள். ஆனால் நீங்கள் சாதாரணமாக வந்தால்... எனது நோக்கம் இதுதான். தேவனுக்குச் சித்தமானால், அடுத்த கோடையில் அமெரிக் காவிலும் கனடாவிலும் ஒரு மிகப்பெரிய முயற்சியை மேற்கொள்ளத் திட்டமிட் டுள்ளேன். சுமார் எட்டு முதல் பத்தாயிரம் பேர் அமரக்கூடிய ஒரு கூடாரத்தை நான் ஆர்டர் செய்துள்ளேன், இந்தக் கூடாரத்தை அமைக்கக்கூடிய இடங்களைக் கண்டறிய விரும்புகிறோம், வெறுமனே நான்கு அல்லது ஐந்து நாட்கள் அல்லது ஒரு வாரம் மட்டும் தங்கியிருக்காமல்; நான்கு அல்லது ஐந்து வாரங்கள் தங்கியிருந்து, போதித்து, மதிய வேளைகளையும் பயன்படுத்தி, அஸ்தி வாரத்தை மிகவும் நெருக்கமாகப் போட விரும்புகிறோம். "7 பின்னர் சில சமயங்களில் ஒரு நபரிட மிருந்து பொல்லாத ஆவி வெளியேறிய பின், அநேக நேரங்களில் அவர்களுக்கு அது தெரிவதில்லை; அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களுக்குத் தெரியாது, அவர்களில் சிலர், ""ஓ, நான் இன்னும் அதிக வியாதிப்பட்டேன்,"" என்கிறார்கள். சரி, நீங்கள் இன்னும் அதிக வியாதிப்படத்தான் வேண்டும். அவர்களுக்கு அது தெரியாது. உங்களுக்குள் இருக்கும் ஒரு வளர்ச்சியைப் போல... இப்போது, நாங்கள் அந்த வளர்ச்சியைக் கையாள்வதில்லை. மருத்துவர் அதை வெட்டி எடுக்கும்போது அதைக் கையாளுகிறார். ஆனால் நாங்கள் கையாள்வது அந்த வளர்ச்சியில் உள்ள உயிரை. அதுதான் அந்த உயிர்." "இப்போது, உதாரணமாக, புற்றுநோயைப் போல. புற்றுநோய் நமது பெரும் கொல்லிகளில் ஒன்று. சரி, இப்போது புற்று நோய்க்கு ஒரு உயிர் இருக்கிறது. அது உங்கள் உயிரைத் தவிர வேறொரு உயிர். அது வளர்ந்து, பரவுகிறது. வேதாகமம் அதை ஒரு பிசாசு என்று அழைக்கிறது. புற்றுநோய் மருத்துவப் பெயரால் அழைக்கப்படுகிறது, இது ""நண்டு"" என்ற வார்த்தையிலிருந்து வருகிறது, கால்கள் கொண்டு பரவிச்செல்லும் ஒன்று. ஆனால் உண்மையான பதத்தில், அது ஒரு பிசாசு, மற்றும் பிசாசு ஒரு வாதனையாளன்." "8 அது உங்கள் உடலில் அமர்ந்துள்ளது, அது நசுக்கப்பட்ட ஒரு சிறிய செல்லிலிருந்து (உயிரணு) வருகிறது, அல்லது வழக்கமாக, அந்தச் சிறிய செல் பின்வாங்கிப்போய் சில சமயங்களில் உங்கள் உயிரை... ஒரு பாப்டிஸ்ட் சபையார் சொல்வதற்கு இது ஒரு பெரிய வார்த்தை, ""பின்மாற்றம் அடைந் தவன்"" (backslider) என்பது, இல்லையா? ஆனாலும், ஒரு செல் பின்வாங்கிப் போகும்போது, பிசாசு அந்தச் சிறிய செல்லுக்குள் நுழைய முடிந்தால், அது உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் பாதிக்கும்." இப்போது, பிசாசினால் சிருஷ்டிக்க முடியாது. அவனால் ஒரு விஷயத்தையும் சிருஷ்டிக்க முடியாது. தேவன் ஏற்கனவே சிருஷ்டித்ததை மட்டுமே அவனால் திரிக்க முடியும். புரிகிறதா? பாவம் என்பது திரிிக்கப்பட்ட நீதி. புரிகிறதா? பாவம் ஒன்றுமில்லை... பிசாசினால் பாவத்தைக் கூடப் சிருஷ்டிக்க முடியவில்லை. அவனால் நீதியைத் திரிக்க மட்டுமே முடிந்தது. புரிகிறதா? ஏனென்றால் ஒரே ஒரு சிருஷ்டிகர் மட்டுமே இருக்கிறார்; அது தேவன். தேவன் மட்டுமே சிருஷ்டிக்க முடியும். ஆனால் தேவன் சிருஷ்டித்ததை பிசாசு எடுத்துத் திரிக்கிறான். தேவன் உங்களைத் தம்முடைய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் சிருஷ்டித்தார். பிசாசு உங்களுக்குள் நுழைந்து உங்களைத் தன் வழிக்குத் திரிக்கிறான். அதுதான் பிரச்சனையை உண்டாக்குகிறது. 9 இப்போது, ஒரு புற்றுநோய், புற்றுநோயிலிருந்து உயிர் போய் விட்ட தென்றால், அது செத்துவிட்டது. ஆனால் ஒரு அற்புதம் நடக்காத வரை அந்த வளர்ச்சி அங்கேயே இருக்கிறது. சரி, அந்த வளர்ச்சி அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது, அதில் உயிர் இல்லை. அது செத்துவிட்டது. அவ்வளவு பெரிய இறைச்சித் துண்டு உங்கள் உடலில் இருந்தால் என்ன ஆகும், சாதாரண தெற்கத்திய பாணியில் சொல்வதானால், உங்கள் உடலில் அழுகிக்கொண்டிருந்தால்? அப்போது உங்கள் இதயம் துடிக்கிறது, ஒவ்வொரு முறை துடிக்கும் போதும், உங்கள் இரத்தம் இதயத்தின் வழியாகச் சென்று இரத்த ஓட்டத்தைச் சுத்திகரிக்கிறது; மேலும் அது இந்த புற்றுநோய் உடலின் செத்த பொருளை எடுத்துக்கொள்கிறது, அது காய்ச்சலை உண்டாக்கும். நீங்கள் முன்னெப் போதையும் விட அதிக நோயுற்றிருப்பீர்கள். ஒருவேளை அது... முதல் எழுபத்திரண்டு மணிநேரத்திற்கு, சுமார் எழுபத்திரண்டு மணிநேரத்திற்கு நீங்கள் நன்றாக உணருவீர்கள், பின்னர் உடல் அழுகும். "10 உதாரணமாக, நீங்கள் இன்று ஒரு மானையோ அல்லது ஒரு மிருகத்தையோ சுட்டுக் கொன்று, அதைத் தராசில் போட்டு எடைபோட்டு பையன்களிடம், ""அந்த மான் இவ்வளவு எடை இருக்கிறது,"" என்று சொன்னால்... கவனமாயிருங்கள், காலையில் அது பல பவுண்டுகள் குறைந்திருக்கும். புரிகிறதா? யாராவது இறந்துவிட்டால், இறுதிச்சடங்கு செய்பவர் பொய்ப்பற்கள் அல்லது செயற்கைக் கண் அல்லது ஏதேனும் ஒன்றை அகற்றுவார், ஏனென்றால் அது சுருங்கும்போது அவை வெளியே வந்துவிடும். ஆனால் அந்த உடலைச் சில நாட்கள் அப்படியே கிடக்க விடுங்கள், பின்னர் அது முன்னெப்போதையும் விடப் பெரிதாகும். ஒரு சிறிய நாயையோ அல்லது சாலையோரத்தில் கொல்லப்பட்ட ஒரு சிறிய விலங்கையோ கவனியுங்கள், சில நாட்களில் அது எப்படி வீங்கிப் பெரிதாகிறது என்று." "சரி, உங்களுக்குள் இருக்கும் அந்தப் புற்றுநோய், கட்டி, டியூமர் ஆகியவற்றிலும் அதுதான் நடக்கிறது. நீங்கள் இன்னும் அதிக வியாதிப்படுவீர்கள். உடனே அந்த நபர், ""ஓ, நான் என் சுகத்தை இழந்துவிட்டேன்,"" என்று சொல்வார். விசுவாசத்தைப் பற்றிக்கொள்வது எப்படி என்று அவர்கள் பயிற்றுவிக்கப் படாவிட்டால்..." "11 இப்போது, கவனியுங்கள், தேவன் ஆரம்பத்தில் எல்லாவற்றையும் அறிந்தி ருந்தார், ஒன்றுமே இல்லாதபோது, ஒளியோ எதுவுமே இல்லாதபோது, தேவன் வெறு மனே, ""உண்டாவதாக..."" என்று சொன்னார். அவர் தம் வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொண்டார், அவருடைய சொந்த வார்த்தையே வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தது. அவர் கொண்டிருந்த ஒரு மனப்பூர்வமான எண்ணத்தால்... அவர் அதை உண்டாக்கப்போகிறார், அவர் வெறுமனே ""உண்டாவதாக"" என்று சொன்னார்... அவருடைய சொந்த வார்த்தையே சிருஷ்டிப் பானது. இன்று நீங்கள் அமர்ந்திருக்கும் இந்தத் தரை, தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டதைத் தவிர வேறொன்று மில்லை. அது சரி. தேவன் எதைப் பேசினாலும், அது அதை நிச்சயமாக உருவாக்க வேண்டும், அதைத் தவிர்க்க முடியாது." "இயேசு மலையிலிருந்து இறங்கி வந்த போது அவரைப் பாருங்கள். அவர் பசியாயிருந்தார், சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று செடியில் தேடினார், அங்கே ஒன்றும் இல்லை. அவர், ""இனி ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசிக்காதிருப்பானாக,"" என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். அதற்காக அவர் கூச்சலிடவில்லை, அவர் வெறுமனே, ""இனி ஒருவனும் உன்னிடத்தில் புசிக்காதிருப் பானாக,"" என்று சொன்னார். அப்போஸ் தலர்களில் ஒருவர் அதைக் கேட்டார். மறுநாள் அவர்கள் அவ்வழியாய் வந்தபோது, அந்த மரம் பட்டுப்போயிருந்தது. பார்த்தீர்களா? அவர் தம் வார்த்தையைப் பேசினார், அது அப்படியே நடக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, அந்த மரத்திலிருந்து உயிர் போய்விட்டது. அது நடந்தே ஆகவேண்டும். தேவன் அப்படிச் சொன்னார்." 12 ஆபிரகாமைப் பற்றி நேற்றிரவு நான் பேசிக்கொண்டிருந்தது அதுதான். தேவனால் வார்த்தை பேசப்படும்போது, அதைப் பிடித்துக் கொள்ளுங்கள், அது என்ன சொல்கிறதோ அதை அப்படியே சிருஷ் டிக்கும். ஆனால் சந்தேகத்தோடும், குதித்துக் கொண்டும், மேலும் கீழும் அலைபாய்ந்து கொண்டும் உங்களால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் அதை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும். அதில் நிலைத்திருங்கள். தேவன் அதை வெளிப்படுத்துவார். இந்த அளலிலுள்ள ஒரு நகரத்தில் தங்குவதற்கு நமக்கு ஒரு மாதம் கிடைத்து, எல்லா ஊழியர்களும், மற்றும் ஒத்து ழைப்பும், எல்லோரும், எல்லா சபைகளும், நான் நம்புகிறேன் - ஜெபக் கூட்டங்களை நடத்தி, மக்கள் ஜெபிக்கப்படுவதற்கு முன்பே இரண்டு அல்லது மூன்று கூட்டங்களுக்கு வந்து போதனைகளைக் கேட்க அனுமதித்தால், அவர்கள் மேடைக்கு வரும்போது, அவர்கள் தங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள் (புரிகிறதா?) என்று நான் நினைக்கிறேன். இந்த நகரத்திலேயே நாம் ஒரு உண்மையான எழுப்புதலைப் பெற முடியும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் உள்ளே வருவதையும், வெடித்து உள்ளே வந்து வெடித்து வெளியேறுவதையும், பரிசுத்த ஆவியானவர் இப்போது இங்கே எவ்வாறு செயல்படுகிறார் என்பதைச் சொல்வதையும் பார்ப்பது, அது ஏதோ ஒன்றைக் குறிக்கிறது. எனவே, நான் சொல்வது போல், இந்தக் கூட்டம் நாங்கள் சென்ற பிறகு, நம்முடைய சகோதரர் கார்வர் அவர்களுடன் தொடர்ந்து நடைபெறும். இது அவர் நடத்திய கூட்டங்களிலேயே மிகச் சிறந்த கூட்டங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், ஏனென்றால் அவர் ஒத்துழைக்கிற ஒரு உண்மையான அற்பு தமான சகோதரராக இருந்து, கூட்டத்திற்கு உதவ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். 13 இப்போது, நாம் ஜெபம் செய்வோம். ஸ்தோத்தரிக்கப்பட்ட ஆண்டவரே, இந்த மதிய வேளையில், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும், வேதவாக்கியங்களின்படி அவர் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும், இந்த வாரம் நம் மத்தியில் அவருடைய நித்திய ஜீவனை நிரூபித்திருக்கிறார் என்றும் முழுமையாக நிச்சயிக்கப்பட்டவர்களாய், எங்கள் இருதயங்களில் மகிழ்ச்சியுடன் உமது தெய்வீக பிரசன்னத்திற்குள் வருகிறோம்... இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தலைமுறைகளுக்கு முன்பாக அவர் எப்படி இருந்தாரோ, அப்படியே இன்றும் உயிருள்ளவராக, அவரது சிறந்த கிரியைகளில் அவரை நாங்கள் கண்டிருக்கிறோம். 14 வேதாகமம் சத்தியம் என்றும், தேவன் இன்னும் தம்முடைய மக்களை நேசிக்கிறார் என்றும் அறிவதில் எங்கள் இருதயங்கள் எவ்வளவாய் களிகூருகின்றன. தம்முடைய நாமத்திற்கென்று ஒரு சபையை, ஒரு ஜனத்தை, தகுதியில்லாதவர்களாகிய புறஜாதிகளிலிருந்து அழைப்பதற்கு இந்தக் கடைசி நாட்களில் அவர் நம்மைச் சந்தித்திருக்கிறார். பிதாவே, இந்த நாளில், வரவிருக்கும் இந்தப் பிரசங்க வேளையில், எங்கள் இருதயங்கள் முன்னெப்போதையும் விட ஆழமாக அசைக்கப்பட்டு, உமது அன்பிலும் விசுவாசத்திலும் வேரூன்றும் வகையில், நீர் எங்களை அற்புதமான முறையில் அபிஷேகம் செய்யும்படி ஜெபிக்கிறேன். இந்த மதிய வேளையில் இந்தக் கண்காட்சி மைதானத்தை விட்டு நாங்கள் செல்லும்போது, எங்கள் வாழ்க்கையில் முன்னெப்போதையும் விட உமக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற சிறந்த தீர்மானம் எங்கள் ஒவ்வொருவர் இருதயத்திலும் இருக்கட்டும். 15 நேரமாகிவிட்டது. மனுஷகுமாரன் இந்நாட்களில் ஒன்றில் வருவார், வேலை செய்ய நமக்கு வெளிச்சம் இருக்கும்போதே நாம் வேலை செய்ய வேண்டும். விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிற வருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடும்படிக்கு, எந்தப் பாரத்தையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட எங்களுக்கு உதவும் ஆண்டவரே. இன்று எங்களுக்கு வார்த்தையைத் திறந்தருளும். பேசுகிற உதடுகளைப் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தப் படுத்துவாராக. அவர் தேவனுடைய வார்த்தையை எடுத்து, எங்கள் தேவைக்கேற்ப ஒவ்வொரு பசியுள்ள இருதயத்திற்கும் கொடுப்பாராக. இயேசுவின் நாமத்தில், அவருடைய மகிமைக்காக நாங்கள் இதை கேட்கிறோம். ஆமென். "16 சிறிது காலத்திற்கு முன்பு, ""நீங்கள் நினைப்பதை விட காலம் பிந்திவிட்டது"" என்ற ஒரு சிறிய வாசகம் வெளியானது. என்னிடம் ஒரு ரீல் (reel) உள்ளது. நான் அதைக்கொண்டு வந்திருக்க வேண்டும். ""நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள்"" என்பதை இங்கே காட்டுவதற்கு இது ஒரு அழகான இடமாக இருந்திருக்கும். யாராவது அதைப் பார்த்திருக்கிறீர்களா? என்னிடம் அது இருக்கிறது, அதைப் பார்த்தபோது நான் கிட்டத்தட்ட மனமாற்றம் அடைந்தேன், அந்த வழியில் மனமாற்றம் அடைவதை நான் அர்த்தப் படுத்தவில்லை. அது என் ஆத்துமாவை அவ்வளவாகக் கலக்கியது." உங்களுக்குத் தெரியும், மாதத்தின் நாள் என்ன என்பதை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் காலண்டரைப் பாருங்கள். ஆனால் காலச் சுழற்சிகளின்படி நீங்கள் எந்த நாளில் வாழ்கிறீர்கள் என்பதை அறிய விரும்பினால், யூதர்களைக் கவனியுங்கள். அதுதான் தேவனுடைய காலக் கடிகாரம். "ஈரானில் இருந்து இந்த யூதர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்ற படம் தொடங்குகிறது, ""லுக்"" (Look) இதழ் இதுகுறித்த ஒரு பெரிய கட்டுரையை வெளியிட்டது. அந்த யூதர்கள் மிகவும் பழமையானவர்கள், அவர்கள் எஃகு முனைகொண்ட கலப்பையைக்கூடப் பார்த்த தில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்தது போலவே பழைய மரக் குச்சிகளால் உழுதார்கள். அந்தப் பெரிய விமானங்கள் இறங்கி, அந்த யூதர்களை பாலஸ்தீனத்திற்குத் திரும்ப அழைத்துச் செல்ல அவர்களை ஏற்றியபோது, அவர்கள் திரும்பி வரும்போது கழுகின் செட்டைகள் மேல் கொண்டுவரப்படுவார்கள் என்று தீர்க்கதரிசிகள் சொன்னதை அது நிறை வேற்றியது." "17 அவர்கள் கப்பல்களிலிருந்தும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கி லிருந்தும், தெற்கிலிருந்தும் அவர்களை இறக்கி விட்டபோது, அவர்கள் தங்கள் முதியவர்களை, தங்கள் வயது முதிர்ந்த தாய் மார்கள், பாட்டிமார் மற்றும் தகப்பன் மார்களைத் தங்கள் முதுகில் சுமந்து வந்துகொண்டிருந்தார்கள்; ஒரு நேர்காணலில் ஒருவர் முன்வந்து, ""நீங்கள் தாயகத்தில் மரித்து அடக்கம் பண்ணப்படுவதற்காகவா தாயகம் திரும்புகிறீர்கள்?"" என்று கேட்டார். அதற்கு அவர்கள், ""இல்லை, நாங்கள் மேசியாவைக் காண வந்தோம்,"" என்றார்கள்." இதை லேசாகக் கடந்து செல்லாதீர்கள். 1946-ம் ஆண்டு, ஏப்ரல், மே ஆறாம் தேதி யூத மக்கள் ஒரு தேசமாக அறிவிக்கப் பட்டார்கள் என்பதையும், 1946-ம் ஆண்டு ஏப்ரல், மே ஏழாம் தேதி கர்த்தருடைய தூதன் எனக்குத் தோன்றினார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கீழே கிடந்த உலகின் மிகப் பழமையான கொடியான, தாவீதின் ஆறு முனை நட்சத்திரம், எருசலேமின் மேல் மீண்டும் பறக்கிறது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். "18 அந்த யூதர்கள் உள்ளே வந்தபோது, அவர்கள் இயேசுவைப் போன்ற ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டதே இல்லை. சுவீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள ஃபிலடெ ல்பியா சபை, இங்குள்ள நோர்வே மற்றும் ஸ்வீடிஷ் மக்களில் அநேகர், இந்தச் சிறிய யூதர்களுக்கு ஆயிரக்கணக்கான வேதாக மங்களையும், புதிய ஏற்பாடுகளையும் அனுப்பினார்கள். யூதர்கள் இந்த வேதாக மத்தை வாசித்தபோது, அருகில் நின்றவர் களிடம், ""இவர்தான் மேசியா என்றால், இயேசு தான் மேசியா என்றால், தீர்க்க தரிசியின் அடையாளத்தை அவர் செய்வதை நாங்கள் காணட்டும், நாங்கள் அவரை நம்புவோம்,"" என்று சொன்னார்கள். யூதர்கள் அடையாளங்களையும், கிரேக்கர்கள் ஞானத் தையும் தேடுகிறார்கள்." "கர்த்தர் எனக்குக் கொடுத்த ஊழியத்திற்கு இது எப்பேர்ப்பட்ட அழகான அமைப்பு. சமீபத்தில் நான் பாலஸ்தீனத்திற்கு இருநூறு மைல் தொலைவில் இருந்தேன். அங்கே போவதற்கு என்னிடம் பயணச்சீட்டு இருந்தது; ""இதுதான் அந்த நேரம்,"" என்று நான் நினைத்தேன்." "ஆனால் எகிப்தின் கெய்ரோவில் ஒரு விமானத்தில் இருந்து பரிசுத்த ஆவியானவர் என்னை அழைத்தார். நான் அந்த இடத்திற்குப் பின்னால் சென்று ஜெபித்தேன், அவர், ""இப்போது போகாதே,"" என்றார். " "19 நாம் உள்ளே சென்று அந்த ஆயிரக்கணக்கான யூதர்களிடம், ""இப்போது, அவர் தீர்க்கதரிசியின் அடையாளத்தை, உயிர்த்தெழுதலைச் செய்தால், நீங்கள் அவரை ஏற்றுக்கொள்வீர்களா என்பது உண்மையா? போங்கள், நீங்களே சில மனிதர்களைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே கொண்டு வாருங்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத அதே மேசியாவாதானா என்று பார்ப்போம்,"" என்று சொல்லும் நாளைக் காண நான் விரும்புகிறேன். கர்த்தர் இங்கே செய்வதைப் போலச் செய்யும்போது, பல்லாயிரக்கணக்கான யூதர்கள் ஒரே நேரத்தில் கிறிஸ்துவிடம் வருவதை நான் எதிர்பார்க்கிறேன். தேவன் யூதர்களின் பக்கம் திரும்பும்போது, புறஜாதிகளின் காலம் முடிவடைகிறது. அது சரி. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். அந்த யூதர்கள் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, அவர்கள் உலகத்தை மீண்டும் உயிர்ப்பிப்பார்கள், ஏனென்றால் அவர்கள் உண்மையான மிஷனரிகள். அவர்களுக்கு இன்னும் மூன்றரை ஆண்டுகள் மீதமுள்ளது என்று தேவன் வாக்குறுதி அளித்தார். நாம் அந்த நேரத்தில் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். ஆகவே, கிறிஸ்துவை நோக்கி விசுவாசத்தில் நாம் முன்னேறிச் செல்லும் போது ஜெபியுங்கள்." 20 இன்று மதிய வேளைக்கான வேத வாசிப்பு... நான் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்ததற்குக் காரணம், மக்கள் கதவுகள் வழியாக உள்ளே வந்து தங்கள் இருக்கையைப் பிடித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் அமரும் வரை நான் காத்திருந்தேன். சங்கீதம் 63. தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப் பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமை யையும் உமது மகிமையையும் கண்டேன். ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். "இந்த மதிய வேளையில், அல்லது இந்த மதியத்திற்காக, ""வேதாகமத்திலுள்ள மகத் தான ஈவு"" என்பதைப் பற்றிப் பேச விரும்புகிறேன் என்று சொன்னேன். நித்திய ஜீவனைத் தவிர தேவன் மனிதனுக்குக் கொடுக்கக்கூடிய வேறு ஏதேனும் பெரிய ஈவு இருக்க முடியுமா என்று இந்த மதிய வேளையில் இங்குள்ள கூட்டத்தில் எத்தனை பேரால் சிந்திக்க முடியும்? ஜீவனை விடப் பெரியதாக ஒரு ஈவும் கொடுக்கப்பட முடியாது. ஜீவன் என்பது... அது உன்னதமான ஈவு. ஜீவன் உள்ள இடத்தில் மகிழ்ச்சி இருப்பதால், அது எல்லா ஈவுகளிலும் பெரியது. தேவனிடம் மட்டுமே நித்திய ஜீவன் இருக்கிறது." "21 இந்த மதிய வேளையில் வேத வாக்கி யங்களின் அமைப்பை நாம் எடுத்துக் கொள்ளும்போது, தீர்க்கதரிசியும் பிரியமான சங்கீதக்காரனுமாகிய தாவீது, பாடுவதற்கு எவ்வளவாய் விரும்பினார்; ஏவுதல் அவர்மேல் வரும், அவர் பாடல்களை எழுதுவார். இயேசு பூமியில் இருந்தபோது தாவீதைக் குறிப்பிட்டு, ""சங்கீதங்களில் தாவீது சொல்லவில்லையா..."" என்று சொன்னதை நான் அடிக்கடி நினைத்திருக்கிறேன். அப்படி யானால், சங்கீதங்களும் தீர்க்கதரிச னமானவை." 22 அவர் வரும்போது அது எப்படி இருக்கும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன், மீட்பின் கதைகள் மற்றும் கர்த்தரின் வருகையைப் பற்றி இன்று நாம் பாடும் இந்த மகத்தான அற்புதமான பாடல்... அவர்கள் பாடும் மற்றும் இசையில் வாசிக்கும் ஒரு பாடலை நான் நினைக்கிறேன், அது ஏறக்குறைய இப்படி இருக்கும், நாணல் பெட்டியில் இருந்த சிறிய மோசேயைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், பயமற்ற தாவீது மற்றும் அவரது கவணைக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கனவு காணும் யோசேப்பின் கதை சொல்லப்பட்டதைக் கேட்டிருக்கிறீர்கள், தானியேல் மற்றும் சிங்கங்களைப் பற்றி நாம் அடிக்கடி பாடுகிறோம். வேதாகமத்தில் இன்னும் அநேகர், அநேகர் உள்ளனர், அவர்கள் அனைவரையும் சந்திக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், நான் உறுதியாய்ச் சொல்கிறேன்! தேவனுடைய சொந்த குமாரனே தலைவராக இருப்பார் அந்த ஆகாயத்துச் சந்திப்பிலே. 23 ஓ, நான் அதை நிஜத்தில் பார்க்க விரும்புகிறேன். நாம் அதைப் பார்ப்போம் என்று நான் நம்புகிறேன், பாடல்கள் ஏவுதலின் கீழ் எழுதப்பட்டவை என்று நான் நம்புகிறேன். இங்கே தாவீது காடுகளில் அலைந்து திரிபவராக, இயற்கையின் மூலம் தேவனை நோக்கினார். நீங்கள் தேவனை மட்டுமே பார்க்க முடியும்... எனது முதல் வேதாகமம் இயற்கை. வானத்தின் பெரிய பறவைகளையும் சூரிய அஸ்தமனங்களையும் நான் எத்தனை முறை பார்த்திருக்கிறேன். சற்று காலத்திற்கு முன்பு நான் மலைகளில் இருந்தேன். நான் எல்க் மான் வேட்டையாடிக் கொண்டிருந்தேன். அது இலையுதிர் காலத்தின் ஆரம்பம், எல்க் மான் மந்தையைக் கீழே விரட்டும் அளவுக்குப் பனி ஆழமாகப் பெய்யவில்லை. நான் ஒருவேளை நாற்பது, ஐம்பது மைல் தூரத்தில் உயிருள்ள ஆன்மா யாருமின்றித் தனியாக இருந்தேன். நாங்கள் வழக்கமாக ஒரு பாடலைப் பாடுவோம். சில சமயங்களில் நான் என் ஆண்டவராகிய கிறிஸ்துவுடன் தனியாக இருக்க விரும்புகிறேன், என் கஷ்டங்களையெல்லாம் அவரிடம் தனியாகச் சொல்ல முடியும். 24 விலங்கைக் கொல்வதற்காக மட்டு மல்ல, வெறுமனே தனித்திருப்பதற்காக மனிதர்கள் தனியாக, மலையில் வெகு தூரம் செல்வது நல்லது. அங்கே இலையுதிர் காலத்தில் புயல்கள் வரும், அவை... சிறிது நேரம் மழை பெய்யும், சிறிது நேரம் பனி பெய்யும், சூரியன் பிரகாசிக்கும், மலைகளில் அந்த உயரத்தில் ஒருவித மாறிவரும் வானிலை இருக்கும். நான் எனது பொதிக்குதிரையை மலையின் வெகு கீழே விட்டுவிட்டு, மரங்கள் நிறைந்த எல்லைப் பகுதிக்குச் சென்றேன். எல்க் மானின் தடங் களையும் அடையாளங்களையும் கவனித்துக் கொண்டே நான் அங்கே நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று நான் ஒரு முழக்கத்தைக் கேட்டேன், நான் பார்த்தேன்; அங்கே ஒரு கருமேகம் வந்து கொண்டிருந்தது, அது ஒரு புயல் என்று எனக்குத் தெரிந்தது. நான் மரங்களுக்குள் இன்னும் கொஞ்சம் கீழே இறங்கினேன், காற்று வீசும் பகுதிக்குள் ஓடினேன், புயல் கடந்து செல்லும் வரை சில மரங்களுக்குப் பின்னால் நின்றுகொண்டேன். "25 அந்தப் பெருங்காற்று முறுக்கியபோது, மரங்கள் அதற்குக் கீழே முனகி, கூச்சலிட்ட போது, நான் சிந்திக்கத் தொடங்கினேன், ""அந்த மரங்கள் ஏன் முனகுகின்றன, கூச்சலிடுகின்றன, ஆடிக்கொண்டிருக்கின்றன?""" தேவன் ஏதோ ஒரு நோக்கத்திற்காகக் காற்றை அனுப்புகிறார், அது வேர்களைத் தளர்த்துகிறது, அப்போதுதான் அவை ஆழமாகத் தோண்டுவதற்கு இடம் கிடைக்கும். தேவன் தம்முடைய சபையில் ஒரு எழுப்புதலை அப்படித்தான் செய்கிறார். நாம் ஆழமாக வளரவும், சிறந்த பிடிப்பைப் பெறவும் அவர் நம்மை உலுக்கித் தளர்த்துகிறார். ஆவியின் அசைவும் அசைத் தலும் நம்மைத் தளர்த்துகிறது. சிறிய பூவைக் கூடப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தபோது, அது குளிர்காலத்தில் எப்படி மரித்தது, அங்கே அநேகமாக பூஜ்ஜியத்திற்குக் கீழே எழுபது டிகிரி இருந்திருக்கும் என்று நினைத்தேன். அந்தச் சிறிய கிழங்கு போய்விட்டது; பூ போய்விட்டது; சிறிய கறுப்பு விதை அதிலிருந்து விழுந்தது; அது அழிந்துபோனது, சதைப்பற்று போய்விட்டது. ஆனால் அந்த மண்ணில் எங்கேயோ ஒரு உயிர் அணு கிடந்தது, உலகிலுள்ள விஞ்ஞானிகள் அனைவரும் அதை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அந்த வெதுவெதுப்பான வசந்த கால சூரியன் அந்தத் தரையில் படத் தொடங்கியவுடன், அந்தச் சிறிய பூ தன் தலையைத் தூக்கி கர்த்தரைத் துதித்தது. ஒரு பூ மீண்டும் வாழ்வதற்கு தேவன் ஒரு வழியை உண்டாக்கினார் என்றால், மனிதன் மீண்டும் வாழ்வதற்கு அவர் எவ்வளவு அதிகமாக ஒரு வழியை உண்டாக் கியிருப்பார். 26 நான் அங்கே நின்று கொண்டிருந்த போது என்னுடைய பழைய மெத்தடிஸ்ட் ஊழியர் நண்பர் ஒருவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தியானாவின் ஹென்றி வில்லில் ஒரு நாள் நாங்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டு ஐக்கியம் கொண்டிருந்தோம், கென்டக்கியின் லூயிஸ்வில்லிலிருந்து சிறிய விவசாய நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. வயலில் நீங்கள் வளர்க்கக்கூடியதைப் போலவே துல்லியமான சோள மணியை உருவாக்கும் இயந்திரத்தை 4-H கிளப் கண்டுபிடித்திருந்தது. வயலில் விளைந்த சாக்கிலிருந்து ஒரு கைப் பிடியையும், இயந்திரம் செய்த சாக்கிலிருந்து ஒரு கைப்பிடியையும் எடுத்து, இரண்டையும் கலந்து விட்டால், உங்களால் அவற்றை மீண்டும் வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது. ஒன்று மற்றொன்றைப் போலவே அதே சோளப் செதில்களையும் (Corn flake), அதே சோள ரொட்டியையும், அதே அளவு கால்சியம், ஈரப்பதம், மையத்தில் சரியான இடத்தில் இதயம், வெளிப்புறத்தில் தோல் ஆகியவற்றை உருவாக்கும். "27 பின்னர் அந்தப் பேச்சாளர் தொடர்ந்து, ""அவற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி அவற்றைப் புதைப்பதுதான், இயந்திரம் செய்தது அழுகிப்போகும், மீண்டும் முளைக்காது. ஆனால் தேவன் வயலில் வளர்த்ததில் உயிர் அணு இருந்தது; அது மீண்டும் உயிர்த்தது,"" என்றார்." """என்ன ஒரு அழகான கதை,"" என்று நான் நினைத்தேன். சபையில் ஒரே இருக்கையில் இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள், இருவரும் உதவிக்காரர்களாகவோ (deacons), போதகர்களாகவோ, அல்லது அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அல்லது விசுவா சிகளில் இருவராகவோ இருக்கலாம், இருவரும் சபைக்குச் செல்கிறார்கள், இருவரும் ஒரே செய்தியைக் கேட்கிறார்கள், ஆனால் ஒருவருக்கு ஜீவன் இருக்கிறது, மற்றவருக்கு இல்லை. மனிதனுக்காக எதையாவது செய்யத் தேவனுடைய கரம் தேவை. நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தால், உங்களுக்குள் தேவனுடைய ஆவியைப் பெற்றிருந்தால், நீங்கள் மீண்டும் வாழ்ந்தாக வேண்டும். நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், எவ்வளவு மதப்பற்றுள்ளவராக இருந்தாலும், அந்த ஜீவ ஆவி உங்களுக்குள் இல்லாவிட்டால், நீங்கள் அழிந்துபோவீர்கள். ஒரே ஒரு நித்திய ஜீவன் மட்டுமே உள்ளது, அது தேவனிடம் உள்ளது." "28 நான் ஆச்சரியத்துடன் கவனித்தபோது, அங்கே நின்று, என் துப்பாக்கியை மரத்தின் மீது சாய்த்து வைத்துவிட்டு, மறுபுறம் பார்த்தேன். ஒரு சிறிய பைன் அணிலின் சத்தத்தைக் கேட்டேன். கனடாவில் உங்களுக்கு அவை இருக்கும் என்று நினைக்கிறேன், சிறிய பையன், ஐரிஷ் காரனின் ஆந்தையைப் போலவே, ஆரவாரமும் இறகுகளுமாக இருப்பான். ஓ, அது என்ன சத்தம் போட்டுக் கொண்டி ருந்தது, காட்டில் உள்ள எல்லாவற்றையும் விரட்டப் போவது போல, கீச், கீச், கீச், கீச் என்றது. ""சரி, சிறிய பையனே, ஒருவேளை நான் உன்னைப் பயமுறுத்தி விட்டேனோ,"" என்று நான் நினைத்தேன்." "நான் மறுபுறம் பார்த்தேன், மலையில் உள்ள பெரிய பிளவுக்குப் பின்னிருந்து சூரியன் வெளியே வந்து, பசுமையான மரங்கள் தண்ணீரைப் பிடித்திருந்த இடத்திற்கு எதிராகப் பிரகாசித்தது, அந்த உயரத்தில் இருந்த குளிர்ந்த காற்று அதை உறைய வைத்திருந்தது. அது பனிக் கட்டிகளாக இருந்தது. அது பள்ளத்தாக்கின் குறுக்கே ஒரு வானவில்லை உருவாக்கியது. அப்போது நான், ""ஓ தேவனே, இதோ நீர் இருக்கிறீர். நீர் வானவில்லில் இருக்கிறீர்,"" என்றேன்." 29 பின்னர் புயலில் வழிதவறிய ஒரு வயதான ஆண் எல்க் மான் மலையின் பக்கவாட்டில் ஊதுவதைக் கேட்டேன். அதில் ஏதோ ஒன்று என் ஆத்துமாவைத் தீப்பற்ற வைக்கிறது. மலையின் பக்கவாட்டில் ஒரு வயதான ஓநாய் ஊளையிட்டது, அதன் துணை கீழே இருந்து அதற்குப் பதிலளித்தது. என் அம்மா பாதியளவு செவ்விந்தியர். வெளிப்புறத்தைப் பற்றி நான் நேசிப்பதற்கு அதுவே போதுமானது. எல்க் மான் மந்தையில் தேவனைக் கேட்பது, ஓநாய் அழைப்பில் தேவனைக் கேட்பது, பூவில் தேவனைக் காண்பது, காற்றில் தேவன், மரங்களில் தேவன், இது இருப்பதற்கு எப்பேர்ப்பட்ட அற்புதமான இடம் என்று நான் நினைத்தேன். தேவன் எங்கும் இருக்கிறார். சும்மா சுற்றிலும் பாருங்கள். இங்கே உள்ளே அவரைப் பெற்றால், அங்கே வெளியே அவரைப் பார்க்கலாம். "நான் அந்தச் சிறிய அணிலைப் பார்த்தேன், ""சத்தமிடுகிற சிறிய பையனே, நான் உன்னைப் பயமுறுத்தினேனா?"" என்று நினைத்தேன். கதையின் மீதியை நான் உங்களுக்குச் சொல்லலாம். நான் மிகவும் உற்சாகமடைந்தேன், ஓ, நான் அப்படிச் சொல்லமாட்டேன்: ஈர்க்கப்பட்டேன், நான் என் துப்பாக்கியை மரத்தின் மீது சாய்த்து வைத்துவிட்டு, என்னால் முடிந்த வேகத்தில் அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன், என் குரல் முழுவதையும் உயர்த்தி அலறினேன். யாராவது காட்டிற்குள் வந்திருந்தால், பைத்தியக்கார விடுதியிலிருந்து யாரோ ஒருவர் அங்கே வெளியே இருப்பதாக நினைத்திருப்பார்கள்." 30 ஆனால் அது என்ன? தேவன் அருகில் இருந்தார். எனக்குள் இருந்த எல்லாவற்றையும் கொண்டு நான் அவரைத் துதித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் அவர் அங்கே வானவில்லில் இருந்தார்; அவர் காடுகளின் வழியாக கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்; அந்த ஓநாயின் மூலம் அவர் என்னை அழைத்தார், அதோ அந்த எல்க் மானில் அவர் பதிலளித்தார். அப்படிப்பட்ட இடத்தில் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. அதனால் நான் அணிலை விட அதிக சத்தம் போட்டேன். நான் கவலைப்படவில்லை. நான் பாறை மலையின் உச்சியில் கர்த்தரை ஆராதித்துக் கொண்டிருந்தேன். "நான் அங்கே நின்றபோது, அந்தச் சிறிய பையன் மேலும் மேலும் சத்தமாக, மேலும் கீழும் குதித்துக் கொண்டிருந்தான். ""ஓ, நான் உன்னைப் பயமுறுத்த விரும்பவில்லை, சிறிய பையனே,"" என்று நான் நினைத்தேன். அவன் தன் சிறிய தலையைச் சாய்த்து, கீழே பார்ப்பதைக் கவனித்தேன். ""ஒருவேளை அவன் என்னைப் பார்க்கவில்லை போலிருக்கிறது,"" என்று நினைத்தேன்." "31 புயல் அடித்துக் கொண்டிருந்தபோது, அவனுக்கு... புயல் ஒரு பெரிய கழுகை இந்தக் காற்று வீசும் பகுதிக்குள் இறக்கியிருந்தது. அவன் பயந்தது அந்தக் கழுகைப் பார்த்துத்தான். அந்தப் பெரிய கழுகு மரக்கட்டையின் மீது குதித்து, அந்தப் பெரிய வெல்வெட் கண்களால் என்னையும் அந்தச் சிறிய அணிலையும் பார்த்தது. ""இது விசித்திரமாக இருக்கிறது. நான் வெளியே அங்கெல்லாம் தேவனைக் கேட்கிறேன், பிறகு எப்போது இது குறிக்கிடும். எனது புனிதமான ஆராதனை ஏன் தடைபட்டது? ஆண்டவரே, நீர் ஏன் இதைச் செய்தீர், ஏன் இதை நடக்க விட்டீர்?"" என்று நினைத்தேன். நான் அந்தப் பெரிய கழுகைக் கவனிக்கத் தொடங்கினேன். ""இப்போது, தேவனே, நீர் அந்தக் கழுகுக்குள் இருக்க முடியுமா?""" அவன் பயப்படவில்லை என்பதை நான் கவனித்தேன். தேவன் கோழைகளை விரும்பு வதில்லை. தேவன் அவனுக்கு இரண்டு சிறகுகளைக் கொடுத்திருக்கிறார். அவனுக்குத் தேவன் கொடுத்த ஈவின் மீது நம்பிக்கை இருந்தது. நான் அந்தத் துப்பாக்கியைப் பிடிப்பதற்குள் தான் அந்த மரங்களுக்குள் இருக்க முடியும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அவன் ஏன் பயப்படவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் தன் இறகுகளை உணர்ந்து (நீவி) கொண்டே இருந்தான். சிறகுகள் எல்லாம் வேலை செய்யும் நிலையில் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு அவர்கள் என்ன செய்வார்களோ, அது உங்களுக்குத் தெரியும். சபை ஒன்றுகூடி, தங்கள் ஆவிக்குரிய சிறகுகளை எல்லாம் வேலை செய்யும் நிலையில் வைத்துக் கொண்டால்... என்று நான் நினைக்கிறேன். 32 அவன் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவன் என்னைப் பார்த்துப் பயப் படவில்லை, ஆனால் அந்தச் சள சள சத்தத்தை அவன் விரும்பவில்லை. எனவே அவன் ஒரு பெரிய குதி குதித்து, இரண்டு மூன்று முறை தன் சிறகுகளை அடித்தான். அவன் மரங்களுக்கு அப்பால் இருந்தான். தேவன் எனக்குக் காட்ட முயன்றதை நான் கண்டேன். வானத்தின் அந்த மிகப் பெரிய பிரம்மாண்ட எஜமானன், அவன் தன் பெரிய சிறகுகளை அப்படி விரித்தான்; அவன் ஒரு முறை கூட மீண்டும் சிறகடிக் கவில்லை. அந்தக் காற்று அலைகளில் தன் சிறகுகளை எப்படி அமைப்பது என்று அவனுக்குத் தெரிந்திருந்தது, அவன் மேலே, மேலே, மேலே உயர்ந்தான், அவன் ஒரு சிறிய புள்ளியாக மாறும் வரை. """ஓ தேவனே, எனக்கு மீண்டும் ஒரு பரவசம் உண்டாகப் போகிறது. அது சரி. மெத்தடிஸ்டில் சேர்ந்து, பிறகு அவர்களை விட்டு விட்டு பாப்டிஸ்ட் மற்றும் நாசரே யருக்குச் செல்வது அல்ல. பரிசுத்த ஆவியின் வல்லமையில் உங்கள் விசுவாசத்தை எப்படி வைப்பது மற்றும் உயர்த்தப்படுவது என்பதை அறிவதுதான் அது. அலைகள் உள்ளே வரும்போது, நிழலுக்கு மேலே சவாரி செய்யுங்கள். உம்மோடு எனக்கு ஐக்கியம் தாரும், ஏனென்றால் அந்த வெளிச்சத்தில் நான் ஊற்றைக் காண்கிறேன், அது என்னைச் சுத்திகரிக்கும் இரத்தம்"" என்று நான் சொன்னேன்." "அவன் அந்தச் சிறிய பழைய மண்ணுக்குரிய அணிலை அங்கே அமர்ந்து, ""அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டன. பரிசுத்த ஆவி என்று எதுவும் இல்லை. உனக்கு இருந்தால் சுகமாக முடியாது...?"" என்றெல்லாம் சொல்லும்படி விட்டு விட்டான். அவன் தன் சிறகுகளை விரித்து அதிலிருந்து பறந்து சென்றான். தேவனே, எங்களுக்கு கழுகைப் போல சிறகுகளைத் தாரும். ""அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டன. தெய்வீக சுகம் என்று எதுவும் இல்லை, வெறும் ஹோலி-ரோலர்கள் (holy-rollers) தான்."" இங்கே ஒரு சள சள, அங்கே ஒரு சள சள, எவ்வளவு மண்ணுக்குரியவர்களாக இருக்க முடியுமோ அவ்வளவு மண்ணுக்குரியவர்கள்." 33 அவன் எதையும் பொருட் படுத்தவில்லை, பிறகு அவனுக்கு அது வெறுத்துப் போனது. இந்தச் சபையும் அதையே செய்யும் என்று நம்புகிறேன். உங்கள் பெரிய சிறகுகளைத் தேவனுடைய வாக்குறுதியில் வையுங்கள்; பரிசுத்த ஆவியானவர் உங்களை அதிலிருந்து பார்வைக்கு எட்டாத தூரத்தில் சுமந்து செல்லட்டும், அது வெறும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் சிலம்பு போலவும் மாறும் வரை. இயற்கையில், தேவன் இயற்கையில் வாழ்கிறார். தாவீது இயற்கையின் ஒரு பெரிய மனிதர். அவர் அதைப் படித்தார். அவர் அங்கே தேவனைக் கண்டார். தனது கவணைக் கொண்டு ஒரு கரடியைக் கொல்வதற்கு, ஒரு சிங்கத்தைக் கொல் வதற்குத் தேவன் எப்படி உதவ முடியும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் அவரால் இந்தப் பாடல்களை எழுத முடிந்தது. "ஆனால் பாடலின் விசித்திரமான பகுதி இதுதான். ""உம்முடைய கிருபை ஜீவனைப் பார்க்கிலும் மேலானது."" வேதவாக்கியத்தின் அமைப்பை நீங்கள் கவனித்தீர்களா? ""உம்முடைய கிருபை எனக்கு ஜீவனைப் பார்க்கிலும் மேலானது, ஆகையால் நான் உம்மைத் துதிப்பேன். வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது.""" "34 தாவீது எதைப் பற்றிப் பேசுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அதை முதலில் படித்த போது, ""தீர்க்கதரிசி எதை அர்த்தப் படுத்துகிறார்? 'உம்முடைய கிருபை ஜீவனைப்பார்க்கிலும் மேலானது' என்று?"" என்று நினைத்தேன். ஜீவனை விடச் சிறந்தது எதுவாக இருக்க முடியும்? ஒன்றுமில்லை. எனவே நான் இந்தக் கருத்தை உருவாக்கினேன். இரண்டு வகையான ஜீவன் இருக்க வேண்டும். ஜீவனுக்கு ஒரு கூட்டு அர்த்தம் உள்ளது. அது ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களைக் குறிக்கிறது." இப்போது, குடிப்பது, புகைபிடிப்பது, சூதாடுவது, சுற்றித் திரிவது, நடனமாடுவது ஆகியவற்றை ஜீவன் (வாழ்க்கை) என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது திரிக்கப்பட்ட வாழ்க்கை. அது மரணம். அது நிச்சயமாகவே அப்படித்தான். பிசாசு அந்த வாழ்க்கையைத் திரித்திருக்கிறான், நீங்கள் அதை வாழ்க்கை என்று நினைக்கிறீர்கள், ஆனால் அது மரணம். அந்த வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானதாகிறது. இன்று மக்கள் எதை வாழ்க்கை என்று அழைக்கிறார்களோ, அது ஒரு துப்பாக்கியை எடுத்துத் தங்கள் மூளையைச் சிதறடிக்கும் அளவுக்கு மிகவும் பரிதாபகரமானதாகிறது. தேவன் எதைப் பற்றிப் பேசினாரோ, அது வாழ்க்கையாக இருக்க முடியாது. "35 பல இளம் பெண்கள், தாங்கள் நகரத்திற்குச் சென்று, தெருவில் நடந்து செல்லும்படி கவர்ச்சியாகத் தெரியும் சிறிய பழைய ஆடைகளை வாங்கப் போதுமான பணத்தைச் சம்பாதித்து, எல்லாவற்றையும் அலங்கரித்துக் கொண்டால், பையன்கள் அவளைப் பார்த்து விசிலடிப்பார்கள் (wolf-whistle), அல்லது வாயில் ஒரு சூயிங் கம் போட்டுக்கொண்டு, ""இதுதான் வாழ்க்கை,"" என்று அவள் சொல்கிறாள்..." "சகோதரியே, நீங்கள் தவறு. அது மரணம். ""சிற்றின்பத்தில் வாழ்கிறவள் உயிரோடிருக் கையிலும் செத்தவளாயிருக்கிறாள்,"" என்று வேதாகமம் சொல்லுகிறது." "தனது சம்பளத்தில் உயர்வு கிடைத் திருப்பதாலும், ஒரு சிறந்த காரை வாங்க முடியும் என்பதாலும், இன்னும் கொஞ்சம் சிறந்த உடையை அணியலாம் என்பதாலும், ""பையனே, நான் இப்போது வாழ்கிறேன்,"" என்று மனிதன் நினைக்கிறான். உங்களிடம் கிறிஸ்து இல்லையென்றால், நீங்கள் மரித்திருக்கிறீர்கள். அது திரிக்கப்பட்ட வாழ்க்கை." 36 சிறிது காலத்திற்கு முன்பு, இந்த அற்புதமான, அழகான, தேவன் கொடுத்த கனடாவில் உள்ள ஒரு பெரிய நகரத்தில் நான் இருந்தேன். நான் இதைச் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், நான் ஒரு இளைஞனாக இருந்தால், கனடாவின் குடிமகனாக மாற விரும்புவேன், அது கொடுப்பதற்கு அதிகமாக உள்ளது. எனக்கு கனடாவைப் பிடிக்கும். எனது உலகப் பயணங்களில், பான்ஃப் (Banff) மற்றும் ஜாஸ்பர் (Jasper) ஆகிய இடங்களை விட அழகான இடத்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. நான் ஜங்ஃப்ராவ்ஜோச் (Jungfraujoch), ஈகர் (Eiger), மற்றும் மன்ச் (Mönch) மற்றும் சுவிஸ் ஆல்ப்ஸ் முழுவதும், ஜெர்மனி மற்றும் உலகம் முழுவதும் சென்றிருக்கிறேன், ஆனால் உலகம் கொடுப்பதற்கு உள்ள எதையும் பான்ஃப் மற்றும் ஜாஸ்பர் தோற்கடித்துள்ளது. ஆயிரவருட அரசாட்சியில் கர்த்தர் என்னை அங்கே வாழ அனுமதிப்பார், அவர் அனுமதிப்பார் என்று நம்புகிறேன், இப்போது நீங்கள் எல்லோரும் எங்கே அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களோ, அப்போது நாம் ஒன்றாக இருப்போம் என்று நம்புகிறேன். அது அழகானது! 37 நான் உங்களின் பெரிய நகரங்களில் ஒன்றில், ஒரு அன்பான சகோதரர் என்னைத் தங்க வைத்திருந்த மிகப்பெரிய ஹோட் டல்களில் ஒன்றில் இருந்தேன். ஒரு நாள் இரவு கூட்டத்திலிருந்து வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன், சுமார் நான்காவது அல்லது ஐந்தாவது மாடிக்குச் சென்றேன். அமெரிக்கா விலிருந்து வந்த ஒரு கூட்டம் அங்கே இருந்தது, அவர்கள் ஒரு குறிப்பிட்ட லாட்ஜ் (lodge) வைத்திருக்கிறார்கள், அதன் பெயரை நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு லாட்ஜ், ஒரு குறிப்பிட்ட லாட்ஜ் அங்கே தங்கள் ஜூபிலி அல்லது மாநாட்டை நடத்திக் கொண்டிருந்தது. அன்று மதியம் சபைக்குச் செல்லும் முன் மக்களிடம் சில வேடிக்கையான நடவடிக் கைகளை நான் கவனித்தேன். ஆனால் அன்று இரவு நான் திரும்பி வந்தபோது, மேல் தளத்தில் லிஃப்டில் இருந்து வெளியே நடந்தபோது, ஓ, நான் பார்த்ததிலேயே மிக மோசமான குடிவெறி விருந்துகளில் ஒன்றை அவர்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். அங்கே இருபத்தைந்து அல்லது முப்பதுகளின் முற்பகுதியில் இருக்கும் இரண்டு அழகான பெண்கள், தங்கள் உள்ளாடையைத் தவிர வேறொன்றும் அணியாமல் தரையில் நடந்து வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு பாட்டில் விஸ்கியை வைத்திருந்தார்கள், ஆண்கள் அவர்களை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றார்கள். 38 நான் நிழலுக்குள் ஒதுங்கி நின்றேன். அவர்கள் இருவரும் திருமண மோதிரங்களை அணிந்திருந்தார்கள். இப்போது, அவர்கள் அதைச் சுத்தமான வேடிக்கை என்று அழைக்கிறார்கள். அது அழுக்கான பாவம். சரி. ஒருவேளை வீட்டில் ஒரு கணவன் குழந்தையைப் பார்த்துக்கொண்டு, தன் மனைவி எங்கோ ஒரு நல்ல கூட்டத்துடன் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டு, ஒரு சிறிய சமூக ஒன்றுகூடலில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் அது ஒரு குடித்து அழிக்கும் இடமாக மாறுகிறது. என்ன ஒரு பயங்கரமான விஷயம்! அந்த வகையான வாழ்க்கையைப் பற்றி தேவன் என்ன நினைக்கிறார்? "ஒரு இளம் பெண்ணை விட இருபது வயது மூத்தவராக இருக்கக்கூடிய ஒரு வயதான மனிதர், அவளது உடலில் தவறான இடத்தில் பிடித்து, அவளை அறைக்குள் இழுத்துச் செல்வதையும், நடக்கும் அனைத்தையும் நான் பார்த்தேன்... நான் அங்கே நின்று ஜெபிக்கத் தொடங்கினேன். சில நிமிடங்களில் அவர்கள் வெளியே வந்தார்கள், அந்த முதியவர் மிகவும் குடித்திருந்ததால் அந்தப் பெண்ணைப் பிடிக்கக் கூட முடியவில்லை. அவர்கள் வெளியே வந்தபோது, அவர்களில் ஒருத்தி அங்கே நின்று, தான் அணிந்திருந்த மீதமுள்ள ஆடைகளையும் கழற்றிவிட்டு, விஸ்கியைக் குடித்துவிட்டு, தன் காலைத் தூக்கி, ""வூப்பீ (Whoopee). பையனே, இதுதான் வாழ்க்கை,"" என்றாள்." "39 என்னால் இனி சும்மா இருக்க முடிய வில்லை. நான் வெளியே ஓடிச்சென்று அந்தப் பெண்ணின் கையைப் பிடித்தேன். நான், ""அம்மையாரே, இது மரணம். இது வாழ்க்கை அல்ல,"" என்றேன். அவர்கள் விஸ்கி பாட்டில்களைப் போட்டுவிட்டு ஓடினார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் நன்றாகப் பொழுதைக் கழிப்பதாக நினைத்தார்கள், ஆனால் அவர்கள் மரித்திருந்தார்கள்." "இப்போது, தாவீது இங்கே சொன்னார், ""தண்ணீர் இல்லாத வறண்ட நிலத்தில் இருப்பதைப் போல என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்கிறது."" இப்போது, தேவன் ஒரு மனிதனை தாகம் உள்ளவனாகச் சிருஷ்டித்தார். உங்கள் அமைப்பு, நீங்கள் தாகம் கொள்ளும்படி உருவாக்கப்பட்டீர்கள். தேவன் உங்களை அப்படிப் படைத்தார். உங்களுக்குத் தாகம் எடுப்பதை உங்களால் தவிர்க்க முடியாது. தேவன் உங்களை அப்படிச் செய்ய வைத்தார். ஆனால் அவர்மேல் தாகம் கொள்ளும்படி தேவன் உங்களைப் படைத்தார். பிசாசின் இடங்களுக்குச் செல்வதற்கோ, ஹாலிவுட் அல்லது உலக நாகரீகங்களின் மீது தாகம் கொள்வதற்கோ அந்தத் தாகம் உங்களுக்குள் வைக்கப்படவில்லை; தேவனுக்காகத் தாகம் கொள்ளவே அந்தத் தாகம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டது." "40 இயேசு சொன்னார், ""நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்."" தாகம் கொள்வதே ஒரு ஆசீர்வாதம். ஆனால் பிசாசு உங்களை வேறு ஏதோ ஒன்றை நினைக்க வைக்க முயன்றிருக்கிறான். ஆனால் தாகம் உங்களுக்குத் தேவனால் கொடுக்கப்பட்டது." கவனியுங்கள். அவர்மேல் தாகம் கொள்ளும்படி தேவன் உங்களுக்குக் கொடுத்த அந்தப் பாக்கியமான பரிசுத்த தாகத்தை எடுத்து, உலகத்தின் காரியங்களோடும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடும், குடிப் பழக்கத்தோடும், பெரிய களியாட்டங் களோடும் அதைத் திருப்திப்படுத்த முயற்சி செய்ய உங்களுக்கு எவ்வளவு தைரியம். பிசாசு தனது சொந்தக் கருவிகளைத் திரித்து, அவர்மேல் தாகம் கொள்ளும்படி தேவன் உங்களுக்குக் கொடுத்த அந்தத் தாகத்தை எடுத்து, உலகத்தின் காரியங்களின் மேல் உங்களைத் தாகம் கொள்ள வைக்கிறான். உங்களுக்கு இருக்கும் ஒவ்வொரு தாகமும் அவர்மேல் இருக்க வேண்டும். நிச்சயமாக. அதுதான் ஜீவன். "41 நீங்கள், ""இப்போது, சகோதரர் பிரான்ஹாம், உங்களை விட எனக்கு வேதாகமம் நன்றாகத் தெரியும்,"" என்று சொல்கிறீர்கள். வேதாகமத்தை அறிந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு ஜீவன் உண்டாகாது. சபையில் சேருவதன் மூலம் உங்களுக்கு ஜீவன் உண்டாகாது. ஞானஸ் நானம் பெறுவதன் மூலம் உங்களுக்கு ஜீவன் உண்டாகாது. உங்கள் கிறிஸ்தவ மத போதனை நூலை (catechism) அறிந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு ஜீவன் உண்டாகாது. ஒரு ஊழியராக இருப்பதன் மூலம் உங்களுக்கு ஜீவன் உண்டாகாது. அவரை அறிவதே ஜீவன், கிறிஸ்தவ மத போதனை நூலையோ அல்லது உங்கள் சபை விதிகளையோ அறிவது அல்ல, அவரை அறிவதே ஜீவன்." தேவன் உங்களுக்குக் கொடுத்த அந்தத் தாகம், ஒரு சபையின் மீதும் செலவிடப் படக்கூடாது. உங்களை நடனங்களுக்குச் செல்லவும், குடிக்கவும், ஒழுக்கக்கேடாக வாழவும், அதுபோன்ற காரியங்களைச் செய்யவும் பிசாசால் வைக்க முடியா விட்டால், உங்களைச் சபையில் சேர வைக்கும்படி அதைத் திரித்துவிட்டான். அதுவும் இன்னும் திரிக்கப்பட்டதாகவே இருக்கிறது, ஏனென்றால் சபையில் சேருவது உங்களுக்கு ஜீவனைக் கொடுக்காது. 42 ஆனால் அந்தத் தாகத்தை எடுத்து, பரலோகத்திலிருந்து தேவனிடமிருந்து பொழிகின்ற அந்த அழகான பரிசுத்த ஆவியாகிய ஒருபோதும் வற்றாத ஊற்றினிடத்தில் குடிப்பதன் மூலம் அதைத் திருப்திப்படுத்துவதே நீங்கள் ஜீவனைப் பெறுவதற்கான ஒரே வழியாகும். அவரை அறிந்துகொள்வதே ஜீவனைக் கண்டடை வதற்கான வழி; அவருடைய புத்தகத்தை அறிவது அல்ல, அவரை அறிவதே; உங்கள் சபையை அறிவது அல்ல, அவரை அறிவதே; போதகரைத் திருப்திப்படுத்தத் தாகம் கொள்வது அல்ல, கர்த்தரைத் திருப்திப் படுத்துவதே. அதுதான் அந்தப் பரிசுத்த தாகம். அதற்காகத்தான் அது உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள் உலகத்தின் காரியங் களைக் கொண்டு அதைத் தணிப்பீர்களோ? அது மரணம். அது திரிக்கப்பட்டது. """உலகத்திலாவது உலகத்திலுள்ளவைகளி லாவது அன்புகூராவிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை"" என்று வேதாகமம் சொல்லவில்லையா? அந்தப் பெரிய பரிசுத்த தாகம். சபையில் சேருவதன் மூலம் அதை நீங்கள் திருப்திப்படுத்த முடியாது. சபையில் சேருவதில் எந்தத் திருப்தியும் இல்லை. நீங்கள் உங்கள் மனசாட்சியைச் சுட்டுப் போட்டு, உங்கள் இருதயத்தை இச்சையினால் நிரப்ப முயற்சிக்கிறீர்கள். திறந்த வெளிக்கு வாருங்கள்; உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள், தேவனுடைய நீதிக்காகத் தாகம் கொள்ளுங்கள். ""ஜீவனைப்பார்க்கிலும் உம்முடைய கிருபை எனக்கு மேலானது, என் உதடுகள் உம்மைத் துதிக்கும்."" அதைச் சிந்தித்துப் பாருங்கள்." "43 மேலும் தாவீது, நான் நினைக்கிறேன் 47-வது சங்கீதத்தில், ஒரு காட்டுவாசியாக இருந்த அவர், ""மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது,"" என்று எழுதினார்." இப்போது, வெளியிடங்களில் பழகியவன் என்ற முறையிலும், ஆப்பிரிக்காவிலும், காடுகளிலும், இந்த வேதாகமப் புத்தகம் எழுதப்பட்ட கீழ்த்திசை நாடுகளிலும், அங்கே காட்டு நாய்கள், ஓநாய்களின் பெரிய மந்தைகள் உள்ளன. தாவீதுக்கு இந்த விலங்குகளைப் பற்றித் தெரிந்திருந்தது. ஒரு சிறிய மான், இந்த காட்டு, மூர்க்கமான நாய்கள் மான் மந்தைக்குள் ஓடி வரும்போது... அவற்றுக்கு நீண்ட கோரைப் பற்கள் இருக்கும், அவை... மானைப் பிடிக்க அவை தேர்ந்தெடுக்கும் இடங்களில் ஒன்று காதுக்கு நேர் பின்னால், அந்தக் கோரைப்பற்களை உள்ளே இறக்கி, பின்னர் தன் எடையைத் தொங்கவிடும். அது அப்படிச் செய்யும்போது, மானின் கழுத்தைக் கிழித்துவிடும். அவ்வளவுதான். மான் அப்படியே கீழே போய்விடும். 44 மான், நாம் அழைப்பது போல, கழுத்து நரம்பில் (ஜீவ நாடி) அதைப் பிடிக்க முடியாவிட்டால், அதற்குப் பிடிக்க மற்றொரு இடம் இருக்கிறது. அது விலாப்பகுதியில் சரியாகப் பிடித்துக்கொள்ளும். அது அப்படித் தன் பற்களால் அதைப் பிடித்து, தன் எடையைத் தொங்கவிடும்போது, அது மானைத் தன் கால்களிலிருந்து கீழே தள்ளுகிறது. நாய்கள் அந்த மானை மூடிக்கொண்டு, ஒரு நொடியில் அதைக் கிழித்துப் போடுகின்றன. இப்போது, பல சமயங்களில் மான், நாய் அதன் பக்கவாட்டிலோ அல்லது இங்கேயோ பிடிக்கும்போது, அது மிகவும் இறுக்கமாகப் பிடித்தால், சரி, அது... சில நேரங்களில் மான் ஆடுவது சதைப்பற்றைப் பிய்த்துவிடும். அப்போது அந்த விலங்கின் வாயில் சதை இருக்கும், அதை வெட்ட வேறு நாய்கள் நிற்கவில்லை என்றால், அது சில சமயங்களில் தப்பிக்கலாம். ஆனால் அது இரத்தம் சிந்தி்க்கொண்டிருக்கிறது. அந்தச் சிறிய ஜீவனிடமிருந்து இரத்தத்தின் உயிர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. "இப்போது, இங்கே எந்த வேட்டைக் காரனுக்காவது வேட்டையாடுவதைப் பற்றித் தெரிந்திருந்தால், ஒரு மான் தண்ணீரிடம் செல்ல முடிந்தால் அது பிழைக்கலாம். அந்த மானால் தண்ணீரிடம் செல்ல முடியா விட்டால், அது செத்துவிடும். தாவீதுக்கு அது தெரியும். ""மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது,"" என்று அவர் சொன்னார்." 45 நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா, வேட்டை நாய்கள் அதன் பக்கவாட்டில் ஒரு பெரிய துண்டைப் பிடித்து இழுத்திருக்கின்றன, அதன் இரத்தத்தின் உயிர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அந்தச் சிறிய மான் தண்ணீரை மோப்பம் பிடித்துக்கொண்டு நிற்கிறது, வேட்டை நாய்கள் அதன் பின்னால் இருக்கின்றன. அது... அது தண்ணீரைக் கண்டுபிடிக்க வேண்டும், இல்லையென்றால் அது இறந்துவிடும். """என் ஆத்துமா உம்மை அப்படித்தான் வாஞ்சிக்கிறது. ஓ, நான் உம்மைப் பெற்றாக வேண்டும் ஆண்டவரே, இல்லையென்றால் நான் அழிந்துபோவேன்,"" என்று தாவீது சொன்னார். பாவி நண்பனே, நரகத்தின் வேட்டை நாய்கள் உங்களுக்குப் பின்னால் இருக்கின்றன, பாவத்தால் முடங்கி, காயப் பட்டு, நீங்கள் கிறிஸ்துவைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அழிய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருந்தால். அத்தகைய ஆசை ஒரு மனிதனின் இருதயத்தில் வரும்போது, நீங்கள் அந்த நிலைக்கு வரும் போது, அவர் கிறிஸ்துவைக் கண்டடைவார்." "46 ""மானானது நீரோடைகளை வாஞ்சி த்துக் கதறுவதுபோல. நான் அதைப் பெற்றாக வேண்டும். நான் காயப்பட்டிருக்கிறேன். எனக்கு அது இல்லையென்றால், நான் போய்விடுவேன்."" உங்களுக்குக் கிறிஸ்து வேண்டும் என்ற இடத்திற்கு நீங்கள் வரும்போது, நீங்கள் அவரைப் பெற்றாக வேண்டும் அல்லது அழிய வேண்டும், உங்களால் இரவில் தூங்க முடியாது; உங்களால் சாப்பிட முடியாது; நீங்கள் அவரைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும்; நீங்கள் நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாய் இருக்கும்போது பாக்கியவான்கள், நீங்கள் நித்திய ஜீவனைக் கண்டடைவீர்கள்." "அந்த ஜீவனுக்கான தாகத்தைப் பெற இந்த மதிய வேளையில் தேவன் உங்களுக்கு உதவுவாராக, ஏனென்றால் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரே ஒரு ஜீவன் மட்டுமே உள்ளது; அது நித்திய ஜீவன், உங்கள் பாவமன்னிப்பில் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்வதன் மூலம் மட்டுமே அது கொடுக்கப்படுகிறது. ""என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்."" நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட் பட்டிருக்கிறீர்கள். அதன் அர்த்தம் என்ன..." 47 சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பாலைவனத்தில் வழிதவறிய ஒரு செவ்விந்திய வழிகாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரது பெயர் டிம் கோய் (Tim Coy), மிகவும் பிரபலமான வழிகாட்டி. அவர் அரிசோனாவில் பாலைவனத்தில் வழிதவறிவிட்டார், அவருக்குத் திரும்பி வரும் வழி தெரியவில்லை. அவரது குதிரை... நீங்கள் எப்போதாவது வழிதவறிப் போயிருந்தால்... நான் வழிதவறியிருக்கிறேன். மணல் கொதித்து எழும் இடத்தில் மூக்கு புண்ணாகி இரத்தம் கசியும். உங்களால் பேச முடியாத அளவுக்கு நாக்கு தடித்துவிடும், உங்கள் உதடுகள் மேல்நோக்கித் திரும்பி, உள்ளே வெளியே வெடித்துவிடும். பிறகு பிசாசு உங்களுக்கு ஒரு கானல் நீரைக் காட்டுவான். அது ஏதோ ஒன்று... நீங்கள் சாலையில் செல்லும்போது தண்ணீர் பார்ப்பது போல இருக்கும். நீங்கள் அங்கே செல்லும்போது அது தண்ணீர் அல்ல. சபை அங்கத்தினர் களுக்கும் பாவிகளுக்கும் பிசாசு அப்படித் தான் செய்கிறான். அவன் உங்களுக்கு இன்பமான ஒன்றைக் காட்ட முயற்சிக்கிறான். 48 பல சமயங்களில் சுற்றுலாப் பயணிகள் சாலையை விட்டு விலகி, சில பூக்களைப் பறிப்பதற்காகப் பாலைவ னத்திற்குள் செல்கிறார்கள், பிறகு எல்லாம் ஒரே மாதிரியாகத் தெரிகிறது, அவர்களால் திரும்பி வரும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் இறப்பதற்கு முன், அவர்கள் அந்தக் கானல் நீரைப் பார்க்கிறார்கள். அவர்கள் அதை நோக்கி ஓடி, அதற்குள் குதித்து, தங்கள் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதாக நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் தலையில் சூடான மணலை மட்டுமே அள்ளிப் போடுகிறார்கள் என்பதைக் கண்டுகொள்கிறார்கள். மரணத் திற்கு வெகுகாலம் முன்பே, பெரிய கழுகுகள் வானத்திலிருந்து வந்து, அவர்கள் பாலை வனத்தில் கிடக்கும் போதே அவர்களின் கண்மணிகளைக் கொத்தித் தின்றுவிடும். "மக்கள், பாவிகள், சபை அங்கத்தினர்கள் மற்றும் பாசாங்குக்காரர்கள், நீங்கள் பிரபலமாக இருக்க முடியும், இப்படி யெல்லாம் உடை அணியலாம், கூட்டத்தோடு செல்லலாம் என்றெல்லாம் பிசாசு உங்களுக்கு ஒரு கானல் நீரைக் காட்டும்போது, சரீர மரணம் உங்களைத் தாக்குவதற்கு வெகுகாலம் முன்பே நரகத்தின் கழுகுகள் சுவிசேஷத்திற்கு உங்கள் கண்களைக் கொத்தித் தின்றுவிடுகின்றன. நீங்கள் ஒரு கூட்டத் திற்குச் செல்கிறீர்கள், ""நான் அந்த விஷயத்தை நம்பவில்லை,"" என்று சொல்கிறீர்கள். ஏன், நரகத்தின் கழுகுகள் உங்கள் கண்களைக் கொத்திவிட்டன. அதுதான் உங்கள் ஆவிக்குரிய பார்வை." "49 டிம் தான் கீழே வந்ததாகச் சொன்னார். அவர் ஒரு கிறிஸ்தவ மனிதர், மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்தவ மனிதர். அவர், ""நான் குதிரையிலிருந்து இறங்கினேன்; நான் ஜெபித்தேன், தண்ணீருக்காக ஜெபித்தேன்,"" என்றார். ""நான் என் வழியைத் தொலைத்துவிட்டேன், என்னால் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை,"" என்றார். ""சிறிது நேரத்திற்குப் பிறகு எருமையோ அல்லது ஏதோ ஒன்று ஓடியது போன்ற ஒரு பாதையை நான் கண்டேன்,"" என்றார். ""என் வயதான குதிரை, அவள் பெயர் பெஸ் (Bess). அவள் கனைக்கத் தொடங்கினாள், நான் அவள் மீது ஏறினேன், மீண்டும் சவாரி செய்ய முயற்சித்தேன், ஆனால் என்னைச் சுமக்க முடியாத அளவுக்கு அவள் பலவீனமாக இருந்தாள்,"" என்றார். ""இதைப் பின்தொடர்ந்து நான் சிறிது தூரம் நடந்தேன்..."" ""சில நேரங்களில் அந்தப் பாதைகள் ஒரு நீரூற்றுக்கு இட்டுச்செல்லும் என்று என்னிடம் சொல்லப்பட்டது,"" என்றார்." "50 ""நான் அவளைச் சவாரி செய்ய ஆரம்பித்தேன்; அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள்,"" என்றார். ""பிறகு நான் மிகவும் உற்சாகமடைந்து அந்தப் பாதையில் செல்ல முயன்றேன்,"" மேலும், ""முதலில் நடந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியும், நான் இடறி விழுந்தேன். நான் மிகவும் பலவீனமாக இருந்தேன். நான் போய் விட்டேன்,"" என்றார். ""நான் மீண்டும் சேணத்தில் ஏறினேன், ஆரம்பித்தேன்,"" என்றார்." """என் வலதுபுறத்தில், வலதுபுறமாகச் செல்லும் ஒரு சிறிய மங்கலான பாதை இருந்தது,"" என்றார். ""என் வயதான குதிரை பெஸ் அந்தப் பாதையை எடுக்க முயன்றது,"" என்றார். ""நான், 'பெஸ், அங்கிருந்து வெளியே வா. நீ அந்தப் பாதையை எடுக்க முடியாது. இதுதான் பாதை. இது அகலமானது. இது சிறந்தது. அதிகம் பேர் இந்த வழியில் சென்றிருக்கிறார்கள். இது தண்ணீருக்குச் செல்கிறது,' என்றேன்."" ""அவள் கனைத்துக்கொண்டு மறுபுறம் செல்ல முயன்றாள்,"" என்றார்." "51 ""நான் சக்கர முட்களை (wheel spurs) அணிந்திருந்தேன். எனக்குத் தெரிவதற்கு முன்பே, அந்த அகலமான பாதையில் அவளைப் போக வைப்பதற்காக இந்தச் சக்கர முட்களால் அவளைத் துண்டு துண்டாக வெட்டிக் கொண்டிருந்தேன்,"" என்றார். ""பிறகு அவள் ஆரம்பித்தாள்; அவள் இடறி முழங்கால் போட்டாள்,"" என்றார். ""நான் அவளிடமிருந்து கீழே குதித்து, அவளைப் பார்த்தேன். அவள் அழியும் நிலையில் நின்று கொண்டு, அந்தச் சிறிய பாதையைப் பார்த்து, கனைத்துக்கொண்டிருந்தாள், அந்த முட்களால் நான் அவளை வெட்டிய இடத்தில் இரத்தம் அவள் பக்கங்களில் வடிந்து கொண்டி ருந்தது...""" """நான் அங்கே சிறிது நேரம் நின்றேன், 'ஓ, நாம் என்ன செய்வோம். நாம் எந்த வகையிலும் சிறப்பாக இல்லை,' என்று நினைத்தேன்."" ""நான் அவள் முகத்தைத் தடவி, 'பெஸ், விலங்குகளுக்கு உள்ளுணர்வு இருப்பதாகவும், ஒருவேளை பெரிய அகலமான பாதை நீரூற்றுக்கு இட்டுச் செல்லாது என்றும் நான் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன்,' என்றேன்.""" "52 சகோதரரே, நான் இப்போது உங்களுக்குச் சொல்கிறேன், ""கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமு மாயிருக்கிறது; அநேகர் அதின் வழியாய் உட்பிரவேசிக்கிறார்கள். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமு மாயிருக்கிறது, அந்தப் பாதை மங்கலானது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.""" "கூட்டத்தோடு போகாதீர்கள். கிறிஸ்து வோடு செல்லுங்கள். அவர், ""பெஸ், இந்தப் பாலைவனத்தின் வழியாக நீ என்னைச் சுமந்து சென்றாய், நாம் நண்பர்களாக இருந்தோம். இவ்வளவு தூரம் நீ என்னைப் பத்திரமாகச் சுமந்து வந்திருக்கிறாய்; மீதி வழியில் நான் உன்னை நம்புவேன்,"" என்றார்." பரிசுத்த ஆவியானவரை ஒரு குதிரையோடு ஒப்பிடுவதில்லை, ஆனால், சகோதரரே, ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் இத்தனை வருடங்களாக என்னைக் காத்திருக்கிறார்; மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் அவரை நம்புவேன். என்னை மேலே கொண்டு செல்ல எனக்குக் கிடைத்த இந்தச் சிறந்த அனுபவத்தை நான் எடுத்துக்கொள்வேன். 53 அவள் அந்தப் பாதையில் இறங்கினாள். ஐந்நூறு கெஜம் கூடச் சென்றிருக்க மாட்டார், ஒரு பெரிய நீரோடைக்குள் அவர் பாய்ந்தார், தண்ணீரின் ஆசீர்வாதங்களை அனுபவித்துக் கொண்டு அங்கே அமர்ந்தார். அவரும் குதிரையும் தண்ணீரில் குதித்து, தங்கள் தலைக்கு மேல் தண்ணீரை வாரி இறைத்துக்கொண்டு, தன் குரல் முழுவதையும் உயர்த்தி அலறியதாக அவர் கூறினார். அவர் உயிர் தப்பியது. அவர் அந்த வயதான குதிரையை எடுத்து அதன் மூக்கையும் மற்ற எல்லாவற்றையும் கழுவிவிட்டதாகச் சொன்னார்; அது அத்தகைய ஆசீர்வாதமாக இருந்தது. அவள் அவரைப் பத்திரமாகத் தண்ணீரிடம் கொண்டு வந்திருந்தாள். இந்தப் பாதை சற்று மங்கலாகத் தோன்றலாம், ஆனால் அதன் முடிவில் இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து பெறப் பட்ட இரத்தத்தால் நிரப்பப்பட்ட ஒரு ஊற்று உள்ளது, அங்கே பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கி, தங்கள் குற்றக் கறைகள் அனைத்தையும் இழக்கிறார்கள். "அவர் இதை அனுபவித்துக் கொண்டிருந்த போது, புத்துணர்ச்சி பெற்று, அவரும் அவரது குதிரையும், யாரோ ஒருவர் பேசுவதைக் கேட்டார். அவர் திரும்பிப் பார்த்தார், அங்கே ஒரு மனிதர் போதையில் நின்றார். அவர் பார்த்தார், அங்கே கொஞ்சம் புகை வந்தது. அவர், ""நீங்கள் யார்?"" என்றார்." "அதற்கு அவர், ""தண்ணீரை விட்டு வெளியே வா,"" என்றார். அவரும் வெளியே வந்தார். அவரை முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள், அவர்கள் கொஞ்சம் மான் இறைச்சியைச் சமைத்திருந்தார்கள். அவர், ""நான் டிம் கோய், செவ்விந்திய வழிகாட்டி. நான் இங்கே பல நாட்களாக வழிதவறிவிட்டேன், என் குதிரை என்னைத் தண்ணீரிடம் கொண்டு வந்தது,"" என்றார்." "54 அவர் மான் இறைச்சியைச் சாப்பிட் டார், அதை அனுபவித்தார். அவர்கள் நான்கு பேரும் குடித்திருந்தார்கள். அவர்கள், ""நாங்கள் ஜூலை நான்காம் தேதியைக் கொண்டாடுகிறோம் என்று நினைத்தோம்,"" என்றார்கள். ""நாங்கள் இங்கே சனபார் மலைகளில் இருந்தோம். நாங்கள் ஒரு சுரங்கத்தைக் கண்டறிந்தோம், எங்களிடம் தங்கம் நிறைய இருக்கிறது. நாங்கள் பணக்காரர்களாகத் திரும்பிச் செல்கிறோம்,"" என்றார்கள்." "55 ""எங்களுடன் கொண்டாடு, டிம். ஜாடியை எடு, ஷார்ட்டி (Shorty),"" என்றார். அவர்கள் விஸ்கி ஜாடியை எடுத்து, மூடியைத் திறந்து, ""குடி, டிம்,"" என்றார்கள்." "அவர், ""இல்லை, நான் குடிப்பதில்லை ஐயா,"" என்றார். அதற்கு அவர், ""ஓ, நீ குடிப்பதில்லையா?"" என்றார்." """ஐயா, நான் என் வாழ்நாளில் ஒருமுறை கூடக் குடித்ததில்லை. மான் இறைச்சிக்கு நன்றி, ஆனால் நான் கிளம்புகிறேன்,"" என்றார். ""எப்படியும் இது ஜூலை நான்காம் தேதி இல்லை,"" என்றார்." "அதற்கு அவர், ""நீ ஒருபோதும் குடிப்பதில்லை என்றா சொல்கிறாய்?"" என்றார். ""நான் என் வாழ்நாளில் குடித்ததே இல்லை,"" என்றார்." """பையன்களே, என்ன சொல்கிறீர்கள்? இந்தச் செவ்விந்திய வழிகாட்டியை நம்முடன் முதல் முறை குடிக்க வைப்போம்...?..."" என்றார். அதுதான் வழி. அவர்கள் வாழ்க்கை வாழ்வதாக நினைத்தார்கள்." "56 எனவே ஒரு ஆள், வளைந்த கால்களைக் கொண்ட சிறிய கௌபாய் (cowboy), ஒரு 30-30 ரைஃபிளை எடுத்து அதில் ஒரு தோட்டாவை ஏற்றினான், ஜாடியைத் தன் கையில் எடுத்தான்; ""டிம், எங்கள் மான் இறைச்சி சாப்பிடுவதற்கு போதுமானதாக இருந்தால், எங்கள் விஸ்கி குடிப்பதற்குப் போதுமானது,"" என்றான். ""நீ ஒன்று விஸ்கியைக் குடிக்க வேண்டும், அல்லது இந்த 30-30 துப்பாக்கியின் முனையில் எங்களிடமுள்ள விஷத்தை (குண்டை) வாங்கிக் கொள்ள வேண்டும்,"" என்றான்." "இப்போது, அவர்கள் விளையாட வில்லை. ஒரு குடிகாரன் எப்படி இருப்பான் என்று உங்களுக்குத் தெரியும். டிம், ""பையன்களே, எனக்கு உங்கள் விஸ்கி வேண்டாம், ஆனால் நீங்கள் ட்ரிக்கரை (trigger) இழுப்பதற்கு முன் என் கதையைச் சொல்ல அனுமதியுங்கள்,"" என்றார். ""நான் கென்டக்கியின் ப்ளூகிராஸ் (bluegrass) பகுதியிலிருந்து வருகிறேன்,"" என்றார்." """பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பழைய மரக்கட்டை வீட்டில்,"" ""வீட்டின் மூலையில் வேலி கம்புகளால் செய்யப்பட்ட ஒரு சிறிய படுக்கை (அதில் தான் நான் பிறந்தேன்), மெத்தைக்குச் சோளத் தட்டைகள்,"" என்று சொன்னார், ""காலை வெளிச்சம் ஒரு சிறிய குடிசையின் வெற்றுத் தரையில் ஊர்ந்து வந்தபோது, ஒரு தாய் இறந்து கொண்டிருந்தார்."" ""ஐந்து வயது மட்டுமே ஆன ஒரு சிறிய வெறும் காலோடு இருந்த பையன் வீட்டில் தள்ளாடி நடந்தான், தெய்வீகக் கிறிஸ்தவத் தாய் தன் சிருஷ்டிகரைச் சந்திக்கச் செல்லும் போது அங்கே இருந்த ஒரே நபர்.""" "57 ""என் அம்மா என்னைப் படுக்கைக்கு அழைத்தார்கள், என் மேல் கையைப்போட்டு, 'டிம், தேவன் சீக்கிரம் அல்லது தாமதமாக யாரையாவது உன்னிடம் அனுப்புவார். அம்மா வீட்டுக்குப் போகிறேன். நீ எனக்கு ஒன்றை வாக்குறுதி அளிக்க வேண்டும், டிம். உன் தந்தை காலணி அணிந்தபடியே இறந்தார். அவர் ஒரு குடிகாரராக இறந்தார். அதனால்தான் நாம் வறுமையில் இருக்கிறோம். ஆனால் எனக்கு வாக்குறுதி கொடு, டிம், உன் தாயாக, நீ உயிருள்ளவரை ஒருபோதும் குடிக்க மாட்டாய் என்று,'"" என்றார்." """அவள் உடலை விட்டு உயிர் பிரிந்தபோது, அவளது இறுக்கமான கைகளிலிருந்து என் பிஞ்சு கைகளை நான் விடுவித்தேன்,"" என்று சொல்லி, ""ஐயா, அன்று முதல் இன்று வரை, நான் விஸ்கியைச் சுவைத்ததில்லை. ஆனால் நான் சுத்தமான இருதயத்தோடு கர்த்தருக்குச் சேவை செய்திருக்கிறேன்,"" என்றார். ""இப்போது, நீங்கள் சுட விரும்பினால், தாராளமாகச் சுடுங்கள்,"" என்றார்." 58 அந்த நேரத்தில், ஒரு பிஸ்டல் முழங்கியது, அது முழங்கியபோது, அந்த மனிதனின் கையில் இருந்த ஜாடி வெடித்தது. பின்னாலிருந்த பள்ளத்தாக்கிலிருந்து, நன்கு காயப்பட்டும் அடிபட்டும், கண்ணங்கள் வழியே கண்ணீர் ஓட, இரண்டு துப்பாக்கிகளும் வெளியே தெரிய ஒரு சிறிய மனிதன் வெளியே வந்தான். "அவன், ""உனக்கு என்னைத் தெரியாது, டிம், ஆனால் எனக்கு உன்னைத் தெரியும். உங்கள் யாருக்கும் என்னைத் தெரியாது,"" என்றான். ""என் தலைக்கு ஒரு விலை இருக்கிறது. நான் ஒரு சட்டவிரோதி (outlaw),"" என்றான். ""நான் உங்களை சனபார் மலைத்தொடரிலிருந்து பின் தொடர்ந்து வந்தேன், அந்தத் தங்கத்தோடு உங்களை இங்கே பார்த்தேன். நீங்கள் போதுமான அளவு குடித்த பிறகு, உங்களுக்குள் ஒரு தோட்டாவைப் போடு வதற்குப் பதிலாக, நான் கீழே இறங்கி உங்கள் ஒவ்வொருவர் தலையிலும் அடித்துவிட்டுத் தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். நீங்கள் போதையில் மயங்கும் வரை நான் காத்திருந்தேன், ஆனால், டிம், நானும் கென்டக்கியின் ப்ளூகிராஸ் பகுதியிலி ருந்துதான் வருகிறேன்,"" என்றான்." "59 ""இறக்கும் தருவாயில் இருந்த தாயிடம் நானும் அதே வாக்குறுதியை அளித்தேன், ஆனால் அந்தப் பொருத்த னையை உடைத்ததற்காக நான் வருந்துகிறேன்,"" என்றான். ""ஆனால் என் பிஸ்டல் சத்தம் பரலோகத்தின் பெரிய பள்ளத்தாக்குகளில் எதிரொலித்ததை அவள் கேட்டிருப்பாள் என்று நான் நம்புகிறேன்; நான் ஒரு உறுதிமொழியில் கையெழுத் திட்டேன். இந்த மணிநேரத்திலிருந்து நான் ஒருபோதும் குடிக்க மாட்டேன், டிம்,"" என்றான். அந்தக் கொள்ளையர்கள் மற்றும் சுரங்கத் தேடுநர்கள் குழுவுடன் சேர்ந்து, டிம் அவர்களை ஜீவ ஊற்றுக்கு வழிநடத்தினார்." சகோதரரே, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்கள் அந்த ஜீவ ஊற்றை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாம் ஒரு கணம் தலைவணங்குவோம்... பாவி நண்பனே, நீங்களும் வாக்குறுதிகளை அளித்திருக்கலாம். நீங்கள் நன்றாக வாழ்வதாக நினைக்கலாம், ஆனால் பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய ஈவோ உங்கள் தனிப்பட்ட இரட்சகராக இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்வதன் மூலம் வரும் நித்திய ஜீவன். "60 நாம் ஜெபிப்பதற்கு முன், இந்த மதிய வேளையில் இங்கே கூடியுள்ள இந்தப் பெரிய கூட்டத்தில், பாவிகளாகிய நீங்கள் தேவனை நோக்கி உங்கள் கைகளை உயர்த்தி, ""தேவனே, இதன் மூலம்... நான் என் அம்மாவுக்கு, என் அப்பாவிற்கு, என் சகோதரிக்கு, என் மனைவிக்கு என்றாவது ஒரு நாள் அவர்களை மகிமையில் சந்திப்பேன் என்று வாக்குறுதி அளித்தேன். பரலோகத்திலுள்ள ஜீவ புஸ்தகத்தில் நீர் என் பெயரை எழுதும்போது நான் என் கையை உயர்த்த விரும்புகிறேன். அந்த ஜீவ ஊற்றிலிருந்து நான் குடிக்க விரும்புகிறேன்,"" என்று சொல்வீர்களா?" "தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக அங்கே பின்னால் இருக்கும் சகோதரி. பிரதான தளத்தில் வேறு யாராவது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக அங்கே, ஐயா. ""நான் என் கையை உயர்த்துகிறேன். நான் ஊற்றிடம் வர விரும்புகிறேன்.""" [ஒலி நாடாவில் காலியிடம்] இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து பெறப் பட்ட, இரத்தம் நிறைந்த ஊற்று ஒன்று உண்டு, பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கி, தங்கள் குற்றக் கறைகள் அனைத்தையும் இழக்கிறார்கள். தங்கள் குற்றக் கறைகள் அனைத்தையும் இழக்கிறார்கள், இழக்கிறார்கள்... (வர விரும்பும் அனைவரும் இப்பொழுதே வாருங்கள்)... கறைகள்; பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கி, தங்கள் குற்றக் கறைகள் அனைத்தையும் இழக்கிறார்கள். இந்தச் சரணத்தைக் கவனியுங்கள். மரிக்கும் கள்ளன் கண்டு களிகூர்ந்தான் தன் நாளில் அந்த ஊற்றை; நானும், அவனைப்போல் பாவியாக இருந்தாலும், அங்கே என் பாவங்கள் அனைத்தையும் கழுவுகிறேன். என் பாவங்கள் அனைத்தையும் கழுவுகிறேன், என் பாவங்கள் அனைத்தையும் கழுவுகிறேன்; நானும், அவனைப்போல் பாவியாக இருந்தாலும், அங்கே என் பாவங்கள் அனைத்தையும் கழுவுகிறேன். 61 [ஒலி நாடாவில் காலியிடம்] நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் [ஒலி நாடாவில் காலியிடம்]... நான் தவறாக நினைக் கவில்லை என்றால், நீங்கள் அந்த ஜெப அட்டையுடன் தொடர்புடையவர் இல் லையா? பத்து வருடங்களுக்கு முன்பு நீங்கள் இங்கே அதைப் பெற்றீர்கள். உண்மையில் நீங்கள் அதைப் பெறவில்லை. உங்கள் மனைவி அதைப் பெற்றார். நான் உங்களையோ அல்லது ஜெப அட்டையையோ பார்த்ததில்லை. ஆனால் இப்போது உங்கள் தலைக்கு மேலே அந்த ஜெப அட்டையைப் பார்த்தேன். இப்போது, அந்த வயிற்றுக் கோளாறு மற்றும் காரியங்கள் சுகமாவதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள், மேலும் நீங்கள் அந்த நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுகிறீர்கள். நீங்கள் வந்திருக்கிறீர்கள், இப்போது நீங்கள் அதைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்காக ஜெபிக்கப்பட்டது, ஆனால் இப்போது, நீங்கள் வந்து கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்ததன் மூலம் இப்போது அதைப் பெற்றிருக்கிறீர்கள்; அதுதான் குறைவாக இருந்தது. அது சரி. 62 கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப் படுவதாக. நேற்றிரவு என்னால் ஏன் அந்த ஜெப அட்டையைக் கொண்டு வர முடியவில்லை? ஏனென்றால் அது சரியாக இல்லை. அங்கே ஒரு ஜெப அட்டை இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இந்த வாரம், நான் இங்கே இருந்தேன், அது தெரியாமல். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் ஏழாம் தேதி, இந்த ஜெப அட்டை இதே ஜெப... இந்த அறையில் கொடுக்கப்பட்டது, சில இரவுகளுக்கு முன்பு வரை வைக்கப் பட்டிருந்தது. இப்போது அதன் உரிமையாளர் மறுநாள் இரவு ஜெப வரிசையில் அதைச் சிலரிடம், உதவிக்காரர்கள் அல்லது யாரிடமோ கொடுத்தார், அது மீண்டும் பில்லி பாலிடம் வந்தது, பில்லி பால் அதை என்னிடம் கொடுத்தார், நான் இங்கே வந்தபோது, அந்த மனிதரை அறிந்ததில்லை, என் வாழ்நாளில் அவரைப் பார்த்ததில்லை, அந்த ஜெப அட்டை அங்கே தொங்கிக் கொண்டிருந்தது. 63 சரி, சகோதரரே. நீங்கள் கேட்டதை இப்போது பெற்றுக்கொண்டீர்கள், கிறிஸ்து உங்கள் இரட்சகர். நீங்கள் அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, அவர் உங்களைச் சுகப்படுத்தவும் செய்தார். இதோ இருக்கிறீர்கள். வயிற்றுக் கோளாறு, நெஞ்செரிச்சல் மற்றும் வாயில் புளிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் உங்கள் நரம்புத் தளர்ச்சி... அது சரி. இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள் சுகமாகப் போகிறீர்கள். "அது கிருபை இல்லையென்றால் வேறு என்ன. ""அற்புதக் கிருபை"" (Amazing Grace), எல்லோரும் பாடுவோம். அந்தச் சிறந்த பாடல் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த ஊழியர்கள் இங்கே வந்து இந்தப் பாவி நண்பர்களுக்கு அருகில் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்...?... இப்போது பாவிகள் அல்ல; அவர்கள் பாவிகள் அல்ல. அவர்கள் அறிக்கையிட்டு வந்திருக்கிறார்கள். இந்த நகரத்தின் ஊழியர்கள் இங்கே வரும்படி கேட்டுக்கொள்கிறேன், அப்போது அவர்கள் இவர்களைத் தங்கள் சபைகளுக்கு அழைத்துச் செல்ல முடியும். வாருங்கள் ஊழியர்களே, நீங்கள் யாராக இருந்தாலும், இந்த ஆண்கள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை உங்கள் சபைக்கு வரவேற்கவும்." சரி, அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து. அற்புத கிருபையே, அதன் தொனி எத்துணை இனிமை, பாவி என்னையும் மீட்டாரே! காணாமற்போனேன், கண்டெடுக்கப்பட்டேன், குருடனாயிருந்தேன், இப்போது காண்கிறேன். கவனியுங்கள். அக்கிருபையே (நாமனைவரும்) என் உள்ளத்தில் பயப்பட கற்பித்தது, அக்கிருபையே என் பயங்களை நீக்கியது; அந்தக் கிருபை எவ்வளவு விலையேறப்பெற்றதாய்த் தோன்றியது நான் முதலில் விசுவாசித்த அந்த நேரத்தில்! 64 இப்போது, இந்தக் கூட்டம் அடுத்த சரணத்தைப் பாடட்டும், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து. உங்கள் நுரையீரலைத் திறந்து தேவனை நோக்கிப் பாடுங்கள். பல ஆபத்துகள், தொல்லைகள் மற்றும் கண்ணிகள் வழியாக, நான் ஏற்கனவே வந்திருக்கிறேன்; இவ்வளவு தூரம் என்னைப் பத்திரமாக நடத்தியது கிருபையே, அந்தக் கிருபை என்னை தொடர்ந்து கொண்டு செல்லும். இங்கே எத்தனை கிறிஸ்தவர்கள் இந்த மதிய வேளையில் அதை நம்புகிறீர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள்? சரி. நல்லது. உங்கள் கைகளை உயர்த்திப் பாடுவோம். சரி, எல்லோரும் சேர்ந்து. பல ஆபத்துகள், தொல்லைகள் மற்றும் கண்ணிகள் வழியாக, நான் ஏற்கனவே வந்திருக்கிறேன்; இவ்வளவு தூரம் என்னைப் பத்திரமாக நடத்தியது கிருபையே, அந்தக் கிருபை என்னை வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும். "இப்போது, உங்கள் அருகில் நிற்கும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருடன் கை குலுக்கி, ""தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக, நண்பரே,"" என்று சொல்லுங்கள். மெத்தடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடீ ரியன்கள்..." 65 இப்போது, பீடத்தில் இருக்கும் மனந்திரும்பியவர்களே, நீங்கள் இப்போது கிறிஸ்துவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராக உண்மையாகவே ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் கையை உயர்த்துங்கள். பீடத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் கிறிஸ்துவைத் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக் கொள் கிறீர்கள். இப்போது, நீங்கள் திரும்பி, கூட்டத்தையும் இந்த ஊழியர்களையும் பார்க்கும்படி விரும்புகிறேன். பீடத்தில் உள்ள நீங்கள், கூட்டத்தை நோக்கி இப்படியே திரும்புங்கள். இப்போது, நீங்கள் கிறிஸ்துவைத் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று கூட்டத்திற்குக் காட்டுவதற்கு உங்கள் கைகளை உயர்த்துங்கள். "இயேசு சொன்னார், ""என் வார்த்தை களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு."" நான் பேசிக்கொண்டிருக்கும் ஜீவன் அதுதான். நீங்கள் இப்போதுதான் அதைப் பெற்றீர்கள். ""நீங்கள் ஆக்கினைக்குள்ளாகாமல்; மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள். மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் என் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் அறிக்கைபண்ணுவேன்."" அது சத்தியம், இல்லையா?" 66 இப்போது, ஊழியர்களும் கிறிஸ் தவர்கள் அனைவரும், அவர்களைக் கிறிஸ்து வுக்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் உடன் குடிமக்களாக கிறிஸ்துவின் சரீரத்திற்குள் வரவேற்கிறவர்கள், அவர்களுக்கு வரவேற் பாக உங்கள் கைகளை உயர்த்துங்கள். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப் படுவதாக. இவர்களுக்காக நான் ஜெபிக்கும் போது நாம் இப்போது தலைவணங்குவோம். "பிதாவே, நாங்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், [ஒலி நாடாவில் காலியிடம்] செய்தியின் பலனாக, பாவிகள் பீடத்திற்கு வந்து உம்மைத் தங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக் கொண் டார்கள். இப்போது, உமது வார்த்தையின்படி, அவர்களின் பெயர் ஜீவ புஸ்தகத்தில் உள்ளது, அதை எதுவும் அழிக்க முடியாது. ""நான் அவனைப் புறம்பே தள்ளுவதில்லை. அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஒருபோதும் நியாயத்தீர்ப்பிற்கோ அல்லது ஆக்கினைக்கோ வரமாட்டான்; ஆனால் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட் பட்டிருக்கிறான்.""" "67 அவர்களும் இந்த மதிய வேளையில் உலகத்தின் காரியங்களுக்குப் பரதேசிகளும் அந்நியரும் ஆகிவிட்டார்கள் என்பதை, கிறிஸ்துவின் இந்தப் பெரிய ஐக்கியத்திலுள்ள ராஜ்யத்தின் மற்ற குடிமக்களுக்குக் காட்டுவதற்காக, அவர்கள் உம்மை நோக்கித் தங்கள் கைகளை உயர்த்தி உம்மை அறிக்கை யிட்டார்கள். அவர்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள். இப் போது, ""மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் என் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன்,"" என்று அவர் சொன்னார்." அந்த மனிதருக்கு மேலே அந்த ஜெப அட்டையைப் பார்ப்பதற்கும், இப்போது அவர்கள் முன்பாக நீர் இந்த அற்புதத்தைச் செய்வதைப் பார்ப்பதற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓ ஆசீர்வதிக்கப் பட்ட நித்திய தேவனே, இந்த நேரத்திற்காக நீர் காத்திருந்தீர், இது அவர் களிகூரக்கூடிய நேரம். இந்த வரிசையில் இன்னும் யாராவது நோயுற்றிருந்தால், அவர்களின் உடலிலிருந்து எல்லா வியாதிகளையும் நீர் நீக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களின் ஆத்துமாவை இரட்சிக்க வல்லவர் நீர், நிச்சயமாக அவர்களின் உடலையும் குணப் படுத்த முடியும். அவர்கள் அதற்காகத் தாகமாயிருக்கிறார்கள். நீர் அதை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். "68 இந்தச் சபையை ஒன்றாக ஆசீர்வதியும். அவர்களை உமது அன்பான கரங்களில் ஏந்தி, நாம் அனைவரும் சந்திக்கும் நாள் வரை அவர்களைக் காத்துக்கொள்ளும். கர்த்தருடைய பந்திக்காக அந்தப் பெரிய மேஜையில் நாங்கள் அமரும்போது, ""என் பிதாவின் ராஜ்யத்திலே உங்களோடே நான் இதைப் புதிதாய் அருந்தும் நாள் வரைக்கும், திராட்சப் பழரசத்தை நான் இனிப் பானம் பண்ணுவதில்லை,"" என்று நீர் சொன்னீர்." அந்தப் பெரிய நாளில், அந்தப் பெரிய மேஜை அமைக்கப்பட்டு, எல்லா யுகங்களின் மீட்கப்பட்டவர்களும் ஒருவருக்கொருவர் மேஜையின் மறுபுறம் அமர்ந்திருக்கும் போது, நாங்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொள்வோம். "ஓ ஆண்டவரே, நான் உம்மிடம் வழிநடத்திய லட்சக்கணக்கானோர் அங்கே இருப்பதை நான் காண விரும்புகிறேன், அவர்கள், ""சகோதரர் பிரான்ஹாம், நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி,"" என்று சொல்வதைக் கேட்க விரும்புகிறேன்." "அப்போது நாங்கள் மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்துவோம், ராஜா தனது அழகில் வெளியே வந்து, தனது ஆணி பாய்ந்த கரத்தை எடுத்து எங்கள் கண்களிலிருந்து கண்ணீர் அனைத் தையும் துடைத்து, ""அழாதே, குழந்தைகளே; எல்லாம் முடிந்துவிட்டது. கர்த்தரின் மகிழ்ச்சிக்குள் பிரவேசியுங்கள்,"" என்று சொல்வார்." ஆண்டவரே, இங்கே அறுவடை வயலுக்கு அவர்களை அனுப்பும். அவர்கள் மற்றவர்களை ஆதாயப்படுத்தட்டும். கிறிஸ் துவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென்.